39

67 3 0
                                    

ஒரு வாரம் கழித்து நிலையில்...

முத்துராமன் அறிவு நல்லசெல்வன் உத்தமாவுடன் சேர்ந்து லியா குடும்பத்துடன் சமாதானம் ஆக ஒத்துக்கொண்டனர்...

ஒரு நல்ல நாளில்...

ஆசீர்வாதம் மலர்மணி ஹெரால்டு இசபெல்லா அலோசியஸ் கிறிஸ்டினா வில்லியம் அனைவரும் லியா வீட்டிற்கு வந்து தீர்த்தம் ஊற்றி சமாதானம் ஆகினர்...

கிறிஸ்டினா வில்லியம் லியா இருக்கும் அடுத்த தெரு வீடு வாங்கி குடி வந்தனர்...

அதனால் கிறிஸ்டினா அடிக்கடி லியா வை வீட்டில் பார்த்து சென்றாள்...

ஹெரால்டு லியாவுடன் நன்றாக பேசினாலும் உத்தமாவிடம் ஒரு அளவோடு இருந்தான்...

அடிக்கடி உத்தமாவின் நடவடிக்கையை கவனித்து வந்தான்...

நேரம் நகர நகர நாட்களும் நகர்ந்து கொண்டே இருந்தது...

ஒவ்வொரு நாளும் உத்தமா ஏதோ ஒரு காரணத்தை வைத்து லியாவுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தான்...

ஆனாலும் லியா என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்தான்... என்ன சொன்னாலும் செய்தான்...

பாரதியும் சாம்லியும் உத்தமாவிடம் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை...

லியா தன் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து வந்தாள்...

ஆனால் ஜெரோம் மட்டும் பாரதி சாம்லி மூலம் உத்தமா செய்யும் பிரச்சனையை தெரிந்து கொண்டான்...

ஜெரோமும் உத்தமா தனியாக அழைத்து சென்றா தன்னால் முடிந்த வரை அவனை திட்டி தீர்ப்பான்...

உத்தமா அடிக்கடி வேலைக்கு செல்லாம வீட்டிலேயே இருந்து வந்தான்...

உத்தமா வீட்டில் இல்லாத நேரம் மட்டுமே தெருவில் நடமாட முடியும்... அவன் வீட்டில் இருந்தால் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தால் கூட "எதுக்கு இங்க உட்காந்து இருக்க... உள்ள போ..."என்று சொல்லி லியா உள்ளே போகும் வரை அங்கேயே நிற்பான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now