ஜெரோம் வாயில் biscuit ஐ வைத்தவாறு லியாவையே பார்க்க...
லியா அவனை உற்று பார்த்து கொண்டே "என்ன ஜெரோ அண்ணா...அப்படி பாக்குற..."என்று கேட்க...
ஜெரோம் பின்னால் கண் காட்ட...
லியா புரியாமல் விழிக்க...
ஜெரோம் biscuit ஐ மென்று விட்டு "பின்னால பாரு..."என்று உதட்டை மட்டும் அசைக்க...
லியா திரும்பி பார்க்க..
உத்தமா இடது கையை இடுப்பில் வைத்து வலது கையை நெற்றியில் வைத்து தேய்த்து கொண்டே ஏதோ யோசனையில் இருந்தான்...
லியா ஜெரோம் ஐ பார்த்து "என்ன..."என்பது போல் சைகை காட்ட...
ஜெரோம் தோளை உலுக்கினான்...
ஜெரோம் : டேய் என்ன டா யோசிக்கிற...
உத்தமா :"அது... அது ஒன்னும் இல்ல..."என்று உள்ளே சென்று விட்டான்...
ஜெரோம் அவனையே பார்க்க...
லியா : ஏதாவது சொல்றீயா...
ஜெரோம் : என்னது...
லியா : நா சொன்னதுக்கு பதில் சொல்லாம இருக்க...
ஜெரோம் : என்ன சொன்ன...என்ன சொல்லல...
லியா இடுப்பில் கை வைத்து முறைக்க...
ஜெரோம் யோசித்து விட்டு "ஓ... உத்தமா call பண்ணி கேட்குறது தானே சொல்ற..."
லியா : ஆமா...
ஜெரோம் : சும்மா கேட்டு இருப்பா...
லியா : யோவ்...
ஜெரோம் அதிர்ச்சி ஆகி "என்ன மா பட்டு னு மரியாதையா குறைச்சுட்ட..."என்று கேட்க..
லியா : பின்ன என்ன யா... கல்யாணம் ஆன புதுசு ல இப்படி கேட்டான் தான்... ஏதோ கல்யாணம் ஆன உடனே தனியா விட்டுட்டு போகவும் அப்படி கேட்குறானோ னு நினைச்சேன்... ஆனா போக போக இது வேலையா ல இருக்கான்...
Daily one hour க்கு one time call பண்ணி கேட்குறான்... மொட்டை மாடி ல இருக்கேன் னு சொன்னா...அங்க என்ன வேலை... நீ கீழ போ வா சொல்றான்... கல்யாணம் ஆன ஒரு மூனு மாசம் கடைக்கு கூட்டிட்டு போனான் வந்தான் ஆனா இப்போ எங்கேயும் கூட்டிட்டு போறது இல்ல...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???