காலை நேரம்...
மணி 9.30...
உத்தமா மெதுவாக கண் விழித்தான்...
ஏதோ வித்தியாசமாக இருக்க... கண்ணை தேய்த்து கொண்டு எழுந்து அமர...
கட்டிலை விட்டு கீழே இருந்தான்...
உத்தமா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே " நா கட்டில் தானே படுத்து இருந்தேன்... எப்படி கீழ வந்தேன்..."என்று யோசித்து கொண்டே எழுந்து லியா வை தேடி விட்டு "எங்க காணோம்... சமைக்க கீழ போய் இருப்பா..."என்று தெளியாத தூக்கத்துடன் தள்ளாடிய படி கீழே சென்றான்...
அங்கே ஒருவரும் இல்லை...
வசந்தா துணி காயப்போட்டு கொண்டு இருந்தாள்...
உத்தமா : அண்ணி எங்க யாரையும் காணோம்...
வசந்தா பட்டும் படாமல் "எனக்கு தெரியாது..."என்று அவனை பார்க்காமல் சொல்லி கொண்டே துணியை காய வைத்தாள்...
உத்தமா : லியா எங்க அண்ணி...
வசந்தா : நா தான் தெரியாது னு சொல்றேன் ல... சும்மா என் கிட்டையே எதுக்கு கேட்டுட்டு இருக்க... வீட்டுக்குள்ள இல்லைனா... அவ ரோட்டுல நிப்பா போய் பாரு...
வசந்தா அப்படி சொல்லவும் உத்தமா கண்ணில் சிறிது ஒட்டி கொண்டு இருந்த தூக்கம் கலைந்து எங்கோ சொல்ல...
உத்தமா : "ரோட்டுக்கா..."என்று வேகமாக தெருவிற்கு சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் இல்லை...
உத்தமா கோவமாகி "லியா..."என்று கத்த...
சாம்லியும் லியாவும் பின்னால் இருந்தது அவனை பார்த்து கொண்டே வந்தனர்...
சாம்லி : ஏன் டா இப்படி கத்துற... அதுவும் தெருவுல நின்னுக்கிட்டு... பைத்தியமா நீ...
உத்தமா : "எங்க டி போன..."என்று லியா வை பார்த்து கேட்க...
லியா : நா எங்க போக போறேன்... நா இங்க தான் இருந்தேன்... சாம்லி பேசிட்டு இருந்தேன்...
உத்தமா : இது ரொம்ப முக்கியம்...
சாம்லி : என்ன டா பேசுற நீ... Hospital call என்ன ஆச்சு னு கேட்டுட்டு இருந்தோம் டா... எதுக்கு டா தேவை இல்லாம கத்துற...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???