நல்ல செல்வன் கடும் கோவத்தில் ஓங்கி ஓங்கி கன்னம் சிவக்க அறைந்தான்...
நல்லா : "பாவி பாவி... ஏன் டி இப்படி பண்ண... நீ எல்லாம் என்ன ஜென்மம் டி..."என்று கத்தி கொண்டே அவளை அடித்தான்...
சத்தம் கேட்டு முத்துராமன் அங்கே வந்தார்...
முத்துராமன் : "டேய் தம்பி... நல்லா என்ன பா சத்தமா இருக்கு..."என்று கேட்டு கொண்டே வாசலுக்கு வர...
நல்லா வசந்தா வை அடிப்பதை பார்த்து பதறி போய் நல்லா வை தடுக்க முயற்சிக்க...
முத்துராமன் கையை உதறி விட்டு மறுபடியும் அவளை அடித்தான்...
முத்துராமன் கோவமாகி நல்லா வை அடித்தார்...
நல்லா கன்னத்தை பிடித்து கொண்டு அவரை பார்த்தான்...
நல்லா : "அப்பா..."என்று கத்த...
முத்துராமன் : வாய மூடு டா... ஒரு பொண்ணை அடிக்கிற... நா உன்னையே அப்படியா டா வளர்த்தேன்... சின்னவன் தான் இப்படி ஆகிட்டான் னு நினைச்சா... நீயும் இப்படி ஆகிட்டீயே டா...
நல்லா : அப்பா எதுவும் தெரியாம நீங்க பேசாதீங்க...
முத்துராமன் : என்ன வேணும்னாலும் நடக்கட்டும் டா... அதுக்கு ஒரு பொம்பள புள்ளைய போய் கை நீட்டி அடிப்பீயா...
நல்லா : இவ பண்ண காரியத்துக்கு அடிக்காம என்ன பண்ணுவாங்க... வீட்டை விட்டே விரட்டனும்...
வசந்தா :"அய்யய்யோ..." என்று பதறி போய் அவன் கால் ஐ பிடித்து "வேணாங்க...தெரியாம பண்ணிட்டேன்... இனிமே நா இப்படி பண்ண மாட்டேன்... நா ஒழுங்கா இருக்கேன்... நா இங்க இருக்குறதே தெரியாது... இந்த வீட்டுல நா வாயைவே திறக்க மாட்டேன்... என்னைய மன்னிச்சுடுங்க..."என்று கதற...
நல்லா அவள் பிடித்து இருந்த கால் ஐ அவள் பிடியில் இருந்து உதறி விட்டு அவளை உதைக்க கால் ஐ ஓங்க...
முத்துராமன் :"டேய்..." என்று கத்தி அவனை பிடித்து தள்ளி விட்டார்...
நல்லா : அப்பா நீங்க பேசாம இருங்க... உங்களுக்கு எதுவும் தெரியாது...
DU LIEST GERADE
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Aktuelle Literaturஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
