லியா அவனை திட்ட...
உத்தமா கோவமாகி அவளை நெருங்கி "யார டி பைத்தியம் சைக்கோ னு சொல்ற..."என்று கத்தி கொண்டே அவளை ஓங்கி அறைய...
வாசலில் நின்ற சாம்லி அதை பார்த்து பதறி போய் உள்ளே வேகமாக வந்தாள்...
உத்தமா அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்...
சாம்லி வேகமாக வந்ததில் உத்தமா அருகில் தரையில் இருந்து தண்ணியில் கால் வழுக்கி "ஆ..."என்று கத்தியவாறு விழ போக...
உத்தமா சத்தம் கேட்டு திரும்பி பார்த்து லியா விட்டு சாம்லியை பிடிக்க... மறுபுறம் லியா பிடித்தாள்...
உத்தமா : உனக்கு அறிவு இல்ல... கண்ணை எங்க வச்சுட்டு வர... விழுந்து இருந்தா என்ன ஆகுறது...
சாம்லி கண் மூடி நிதானித்து கண் திறந்து அவனை பார்த்து மெதுவாக அவனை விட்டு விலகி லியா வை பார்த்து கொண்டே "உனக்கு தான் டா அறிவு இல்ல..."என்று சொல்ல...
உத்தமா : நா உன்னைய சொன்னா நீ என்னைய சொல்றீயா...
சாம்லி லியா கன்னத்தை தடவ... அவள் கன்னத்தில் விரல் தடம் பதிந்து இருந்தது...
சாம்லி : நீ பைத்தியக்காரன் டா... இப்படியா டா அடிப்ப... ஏன் டா இவளை இப்படி படுத்துற...
உத்தமா : என்ன கா... நீயும் என்னைய புரிஞ்சுக்காம பேசுற... என்னையவே குறை சொல்லி பேசிட்டு இருக்குற...
சாம்லி : எதுக்கு டா அவளை அடிச்சா...
லியா : சாம் நீ வா... நீ எதுவும் கேட்காத... எதுக்கு தேவை இல்லாத பிரச்சனை...
உத்தமா : என்னது பிரச்சினையா... அப்போ நா பிரச்சனை பண்றேனா...
லியா : நீ வா சாம்... பேசுனா சண்டை வந்துக்கிட்டே தான் இருக்கும்...எதுக்கு அனாவசியமா பேச்சு...
உத்தமா : ஓ... நா அனாவசியமா சண்டை போடுறேன் னு நீ சொல்ல வர...
லியா : எது சொன்னாலும் குதர்க்கமா பேசுனா நா என்ன தான் பண்ண முடியும்...
உத்தமா : நா குதர்க்கமா பேசுறேன்... நீ தான் டி பேச வைக்கிற...
இருவரும் மாறி மாறி கத்தி கொண்டு இருக்க...

STAI LEGGENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Narrativa generaleஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???