Meanwhile herald Home...
ஹெரால்டு யோசனையுடன் குறுக்கே நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்...
ஆசீர்வாதம் அவனை பார்த்து விட்டு மலர்மணியிடம் " உன் மகனுக்கு என்ன ஆச்சு..."என்று கேட்க...
மலர்மணி ஹெரால்டு ஐ பார்த்து விட்டு "தெரியல... ரெண்டு மூனு நாளாவே ஆளு ஒரு மாதிரி தான் இருக்கான்..."என்று சொல்ல...
ஆசீர்வாதம் : நீ எதுவும் கேடகலையா...
மலர்மணி: நா கேட்க... கேட்டி கோவப்படுவனோ னு அமைதியா இருந்துட்டேன்...
ஆசீர்வாதம் : நா பேசவா...
மலர்மணி : வேண்டாங்க...
ஆசீர்வாதம் : "பேசுனா தானே என்ன னு தெரியும்..."என்று ஹெரால்டு அருகில் சென்றார்...
ஆசீர்வாதம் : ஹெரால்டு..
ஹெரால்டு : ஹான் அப்பா... சொல்லுங்க...
ஆசீர்வாதம் : என்ன ஆச்சு பா... Tension ல இருக்குற மாதிரி தெரியுது...
ஹெரால்டு : அது வந்து ஒன்னு இல்ல... ஏதோ ஒரு யோசனை...
ஆசீர்வாதம் : என்ன னு சொன்னா எனக்கு என்ன தோணுதோ சொல்லுவேன் ல...
ஹெரால்டு : உங்க கிட்ட தான் நா பேசனும்... எப்படி சொல்றது தான் தெரியல...
ஆசீர்வாதம் : என் கிட்ட சொல்றதுக்கு என்ன பயம்... சொல்லு...
ஹெரால்டு : அம்மா கொஞ்ச இங்க வாங்க...
மலர்மணி வந்தாள்...
ஹெரால்டு ரெண்டு பேரையும் அமர வைத்து விட்டு அவர்கள் முன் அமர்ந்து இருவர் கையை பிடித்து கொண்டு "அப்பா நா சொல்றேன்... நீங்க கோவப்பட கூடாது..."என்று புதிர் போட...
ஆசீர்வாதம் : சொல்லு பா...
ஹெரால்டு : அது வந்து நம்ம லியா மன்னிச்சு ஏத்துக்கலாம்...
மலர்மணி முகம் மலர... ஆசீர்வாதம் அமைதியானார்...
ஹெரால்டு : என்ன பா எதுவும் பேசாம இருக்கீங்க...
ஆசீர்வாதம் : நா என்ன பா சொல்றது... அது தான் முடிவு பண்ணிட்டீங்க... இது மேல நா என்ன சொல்றது...

VOCÊ ESTÁ LENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficção Geralஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???