58

85 4 0
                                        


ஜெரோமும் சுந்தரும் சாப்டு மாடிக்கு சென்றனர்...

உத்தமா கண் மூடி படுத்திருக்க...
சுந்தர் அதை பார்த்து "நா இப்படி நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு... இவனை பாரு... எவ்ளோ கடன் இருக்கு... எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கிட்டு இருக்கான்..."என்று சலித்தவாறு சொல்ல...

ஜெரோம்: ஏன் டா சலிச்சுக்கிற...

சுந்தர் : இல்ல நா தெரியாம தான் கேட்குறேன்... உனக்கு ஆகல தானே...

ஜெரோம் : இப்ப எதுக்கு இந்த கேள்வி...

சுந்தர் : கேட்டதுக்கு பதில் சொல்லு...

ஜெரோம் : இல்ல... முடிவாகிருச்சு...

சுந்தர் : ம்ம்ம்...உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உன் பொண்டாட்டி உன் சட்டையை மோந்து பாத்தா என்ன பண்ணுவ...

ஜெரோம் : பைத்தியமா டா‌ நீ...

சுந்தர் : யோவ் என் பொண்டாட்டி பண்ணுவா யா... நா வேலை முடிச்சு வீட்டுக்கு வந்தா என் பக்கத்துல வந்து என் சட்டையை மோந்து பாக்குறா..‌.

ஜெரோம் : அட லூசு பயலே... உன் பொண்டாட்டி உன்னையே ரொம்ப love பண்றா யா... ஒரு சில பொண்ணுங்களுக்கு தன் புருஷன் வேலை முடிஞ்சு வந்ததும் கட்டி பிடிக்கனும் தோணும் டா...

சுந்தர் : என் வாயில நல்லா வந்துடும் பாத்துக்கோ... நா என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற... அவ சட்டைய‌ மோந்து பாக்குற யா...

ஜெரோம் : ஏன்...

சுந்தர் : perfume வாசம்... பூ வாசம் எதுவும் வருதா னு பாக்க தான்...

ஜெரோம் : உன் பொண்டாட்டி என்ன லூசா...

சுந்தர் : கிட்டத்தட்ட,..

ஜெரோம்: ஆனாலும் இப்படி எல்லாம் சந்தேகப்பட கூடாது டா...

சுந்தர் : "இன்னும் நிறைய இருக்கு... அது அப்புறம் சொல்றேன்... முத இந்த உத்தமா வா பாக்கலாம்..."என்று திரும்ப...

உத்தமா அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தான்...

சுந்தர் : என்ன இப்படி பாக்குறான்... தூங்கலையா இவே...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora