சாம்லி பாரதியிடம் " இந்த விசயத்தை யார் கிட்டையும் செல்ல வேணாம்... மறைச்சுடலாம்..."என்று சொல்ல...
"என்ன மறைக்க போறீங்க..."
பாரதியும் சாம்லியும் ஒருவரை ஒருவர் பார்த்து திரும்பி பார்க்க...
அறிவு நின்றான்...
சாம்லி மெதுவாக " நாலு பேரு இல்ல... அஞ்சு பேரு..."என்று சொல்ல...
பாரதி அவள் கிள்ளி "சும்மா இரு டி..."என்று அறிவு பார்த்து சிரிக்க...
அறிவு : எதுக்கு சிரிக்கிற... என்ன மறைக்க பாக்குறீங்க...
பாரதி :"ஒன்னுமே இல்லையே... ஒன்னும் இல்ல..."என்று சாம்லியை பார்த்து "ஒன்னும் இல்ல தானை... நம்ம சும்மா தானே பேசிட்டு இருந்தோம்..."என்று கேட்க
சாம்லி கரு விழி உருட்டி கொண்டே "ஆ... ஆ.. ஆமா... ஒன்னு இல்லங்க... சும்மா அது வந்து... ஹான்..
சீரியல் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.."என்று பாரதியை பார்த்து தலையை ஆட்ட...பாரதியும் வேகமாக "ஆமா... ஆமா... சீரியல்... சீரியல் பத்தி தான் பேசுனோம்..."என்று திக்கி திணற...
பாரதி சாம்லி பார்த்து "போ..." என்பது போல் சைகை செய்ய..
சாம்லி : "சரி வரேன் பாரதி... வீட்டுல வேலை இருக்கு..."என்று நகர...
அறிவு வாசலிலேயே நின்று அவளை தடுத்தான்...
சாம்லி : அறிவு கொஞ்சம் தள்ளிக்கோங்க...
அறிவு : "நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரல..."என்று வெளியே எட்டி பார்த்து "இன்னக்கி என்ன உத்தமா வேலைக்கு போகலையா... வண்டி இருக்கு... காலை ல கிளம்பிடு தானே இருந்தான்..."என்று கேள்வியோடு பாரதியை பார்க்க...
பாரதி : அது உத்தமா வேலைக்கு போனான்... சீக்கிரம் வந்துட்டான்...
அறிவு நம்பாத பார்வை பார்க்க...
சாம்லி : Husband and wife பேசிக்கிறீங்க... இடையில நா எதுக்கு... நா போயிட்டு அப்புறம் வரேனே...
அறிவு : நாங்க ஒன்னும் romance பண்ணல... உனக்கு என்ன வேலை இருக்க போகுது... Night dinner ready பண்ணனும் அவ்ளோ தானே... ஒரு நாள் leave விடு... நா hotel ல வாங்கி தரேன்... எட்வின் கிட்ட நா சொல்லிக்கிறேன்... உள்ள வா பேசிக்கிலாம்..."என்று சொல்ல...
![](https://img.wattpad.com/cover/313805036-288-k677087.jpg)
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???