அறிவு பாரதி சாம்லி எட்வின் லியா நல்லா அனைவரும் சாப்டு கொண்டு இருந்தனர்...
முத்துராமன் அப்புறம் சாப்டுவதாக சொல்லி வெளியே சென்று விட...
வசந்தா வந்து வாசலில் நிற்க...
வாசலை பார்த்து அமர்ந்திருந்த எட்வின் சாம்லி வசந்தா வை பார்த்ததும் நல்லாவுக்கு சைகை காட்ட...
நல்லா திரும்பி பார்த்து parcel cover ஐ எடுத்து அவளிடம் நீட்டி "உனக்கும் திவாகருக்கும் சாப்பாடு இருக்கு... நீங்க சாப்டுங்க..."என்று சொல்ல...
வசந்தா எதுவும் பேசாமல் வாங்கி கொண்டு சென்று விட்டாள்..
எட்வின் : பாவமா இருக்கு நல்லா... அவங்களையும் இங்கேயே சாப்ட சொல்லி இருக்கலாம்...
நல்லா : ஏது... சரி தான்... ஏன் நம்ம எல்லாரும் நல்லப்படியா சாப்டுறது இல்லையா...
அறிவு : atleast திவாகரையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம்...
நல்லா : நீ வேற ஏன் டா... திவாகரும் வர வர அவன் அம்மா மாதிரி தான் பண்றான்... திவாகரை பார்த்த வசந்தா வ பாக்க தேவை இல்ல... வசந்தா வ பாத்தா திவாகரை பாக்க தேவை இல்ல... அவ கூடவே இருக்கான் ல அவளோட புத்தி அப்படியே வந்துடுச்சு...
அறிவு : ஏன் அண்ணா இப்படி சொல்ற... சின்ன பையன் அண்ணா அவன்...
நல்லா : இப்ப அப்படி தான் தெரியும்... பின்னாடி வளர்ந்ததுக்கு அப்புறம் பாரு...
எட்வின் : யோவ் அது உன் பையன்...
நல்லா : யாரு இல்ல னு சொன்னா... பாக்க தான் உருவத்துல என்னைய மாதிரி இருக்கான்... ஆனா குணத்துல அப்படியே என் பொண்டாட்டி தான்... என்ன தெரியாம பையனா பொறந்துட்டான்... அவ்ளோ தான்...
ஆளாளுக்கு ஒரு கதையை பேசி கொண்டு இருக்க...
இங்கே...
முத்துராமன் லியா அப்பா ஆசீர்வாதத்திற்கு call செய்தார்...
ஆசீர்வாதம் மலர்மணியிடம் லியா வை வீட்டிற்கு அழைத்து வருவதை பத்தி பேசி கொண்டு இருந்தார்...

ESTÁS LEYENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficción Generalஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???