லியாவும் சாம்லியும் பேசி கொண்டு இருந்தனர்...
எட்வின் தன் அறைக்கு சென்று சட்டையை போட்டு கொண்டு "சாம்லி bike key எங்க..."என்று உள்ள இருந்து கத்த...
சாம்லி :" இரு வரேன்... இவருக்கு இதே வேலையா போச்சு..."என்று முனகி கொண்டே உள்ளே சென்றாள்...
சாம்லி bike key ஐ எடுத்து கொடுத்து விட்டு வர... லியா தரையை வெறித்து பார்த்தவாறு இருந்தாள்...
சாம்லி அவள் பிடித்து உலுக்கி "என்ன டி ஆச்சு... ஏன் இப்படி உட்காந்து இருக்க..."என்று கேட்க...
லியா : ஒரே யோசனையா இருக்கு... நானும் எப்படி எப்படியோ யோசிச்சு பாத்துட்டேன்... ஆனா ஒன்னும் பிடி படல...
சாம்லி : அது தானே... என்ன டா இவ்வளோ காலை நேரத்துல வந்து இருக்காளே... எப்படி னு நானும் யோசிச்சேன்... சொல்லு என்ன நடந்துச்சு... யாரு என்ன சொன்னா... உத்தமா சொன்னானா இல்ல வசந்தா சொன்னாளா...
லியா : எப்படி சாம் கண்டு பிடிச்ச... உன் கிட்ட வந்தா என் குழப்பத்துக்கு பதில் கிடைச்சுரும்...
சாம்லி : முத விசயத்துக்கு வா...
லியா : "எனக்கு காலைலேயே ஒரு அதிர்ச்சி... என்னால இப்பவும் நம்ப முடியல..."என்று சாம்லி கையை கிள்ள...
சாம்லி :"ஸ்...ஆ..."என்று கையை தடவி கொண்டே "ஏன் டி கிள்ளுன..."என்று கேட்க...
லியா : இல்ல கனவா இல்ல நினைவா னு பாத்து கனவு இல்ல... நிஜம்...
சாம்லி : அதுக்கு நா தான் கிடைச்சேனா... உன் கைய கிள்ளி பாக்க வேண்டியது தானே...
லியா : பாத்தேன்...
சாம்லி : என்ன ஆச்சு...
லியா : வலிச்சுது... இருந்தாலும் நம்ம முடியல... அது தான் உன் கிட்ட வந்தேன்...
சாம்லி : ரொம்ப அறுக்காம விசயத்துக்கு வா டி...
லியா : "அது வந்து சாம் காலை..."என்று ஏதோ யோசித்து விட்டு "இல்ல முத இத கேட்குறேன்... இதுக்கு முத பதில் சொல்லு..."என்று கேட்க..
சாம்லி : என்ன னு சொல்லு டி முத...
லியா : உத்தமாவுக்கு ஒரு அக்கா இருக்குற விசயம் உனக்கு தெரியுமா...

VOUS LISEZ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiction généraleஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???