வலியுடன் நான் (நீ)
பாகம் 5வில்லியம் ஹெரால்டு ஜெரோம் மூவரும் பொன்புரத்தை நோக்கி பயணித்தனர் ஜெரோம் சிறு பயத்துடன் "என்ன நடக்க போகுதோ..."என புரியாமல் விழித்தான்...
வில்லியம் : ஏன் டா ஜெரோ அவங்க போகும் போது என்ன சொல்லிட்டு போனாங்க...
ஜெரோம் : கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொல்லிட்டு போனாங்க...
ஹெரால்டு ஜெரோமை முறைத்திட
வில்லியம் : கல்யாணம் பண்ணி இருப்பாங்களா...
ஹெரால்டு : "ஏன் மாமா..."என்று அதிர்ச்சியாக் கேட்க.
வில்லியம் : இல்ல கேட்டேன்...
ஹெரால்டு : நல்லா கேட்டீங்க போங்க...
ஜெரோம் : அவனுக்கு சித்தப்பா பையன் ஒருத்தன் இருக்கான் ராஜ்குமார் அவன் ஒரு ஆர்வகோளாறு உடனே கல்யாணம் பண்ணி வச்சாலும் வச்சுட்டுவான்...
ஹெரால்டு : "டேய் வேகமாக போ டா..."என ஜெரோம் முதுகில் அடித்தான்...
*********
விடிகின்ற நேரம்...
ராஜ் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு உத்தமாவையும் லியாவையும் அழைத்து சென்றான்...
பரசுராமனுக்கு சிறிது பதற்றம் இருந்தது...
ராஜ் : டேய் தாலிய அவங்க கழுத்துல கட்டு டா...
பரசுராமன் : டேய் ராஜ் குடும்பத்தோட பேசிட்டு பண்ணலாம் டா,.. இது மாதிரி பண்ணா தப்பு டா..,
ராஜ் : ஏப்பா கலப்பு திருமணம் பண்ணா வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க... உத்தமா வீட்டுல பத்தி பிரச்சினை இல்ல அங்க பாரதி அண்ணி சொல்றது தான் எல்லாம்... ஆனா அந்த பொண்ணு வீட்டுல ஒத்துக்குவாங்களா என்ன னு தெரியலையே...
பரசுராமன் : எதுக்கும் பாரதிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்...
ராஜ் : "ப்ச் அப்பா பேசாம இருக்க மாட்ட பாரதி அண்ணி கிட்ட நா பேசுறேன் அவங்க புரிஞ்சுக்க உள்வாங்க..."என உத்தமாவை பார்த்து "என் மூஞ்சில என்ன டா தாலிய கட்டு டா உத்தமா என்ன நடக்குதுனு பாக்குறேன்..."என வீராப்பாய் பேச
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???