அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர்...
முத்துராமன் அங்கே இருந்த நாற்காலி தலையில் கை வைத்து இருந்தார்...
அவர் முன் உத்தமா கையை பின்னால் கட்டி கொண்டு எங்கேயோ பார்த்து நிற்க...
லியா தலை குனிந்து நின்றாள்...
முத்துராமன் : இவ்ளோ விசயம் நடந்து இருக்கு... ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இருந்திருக்கீங்க... அப்போ எதுக்கு நா இந்த வீட்டுல பெரிய மனுசனே இருக்கேன்...
பாரதி : மன்னிச்சுடுங்க மாமா... எனக்கு என்ன பண்றது னு தெரியல... உத்தமா இப்படி மாறுவான் னு தெரியாம போச்சு...
உத்தமா : நா மாறல...
நல்லா : வாய தொறந்தா வாய உடைச்சுடுவேன்... ராஸ்கல்... மனுசனா டா நீ...
உத்தமா : உனக்கும் எனக்கும் பேச்சு இல்ல... உன் வேலைய பாத்துட்டு போ...
நல்லா : அப்பா அவன் பேசுறத பாத்தீங்களா...
அறிவு : அவனுக்கு மூளை மங்கி போச்சு... அது தான் யார் பேச்சையும் கேட்டாம அவன் இஷ்டத்துக்கு ஆடுறான்...
உத்தமா : என் விசயத்துல தலையிடாதீங்க னு சொல்லிட்டேன்... அவ்ளோ தான் மரியாதை...
முத்துராமன் : "நிறுத்துங்க டா..."என்று கத்த...
மூவரும் திரும்பி அவரை கடும் கோவத்தில் அனைவரையும் முறைத்தார்...
முத்துராமன் : என்ன டா நினைச்சு இருக்கீங்க... அண்ணே தம்பி மாதிரியா டா நடந்துக்கிறீங்க... ஏதோ பங்காளி மாதிரி சண்டை போட்டுக்கீறீங்க...
உத்தமா : நா ஒன்னும் பண்ணல... அவனுங்களா தான் தேவை இல்லாம பிரச்சனை பண்றானுங்க... என் விசயத்துல தலையிட வேணாம் னு சொல்லு வைங்க...
முத்துராமன் உத்தமா வை அறைந்தார்...
உத்தமா கோவமாக கன்னத்தில் கை வைத்தவாறு "அப்பா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... நா அவனுங்கள கண்டிக்க சொன்னா... நீங்க என்னையவே அடிக்கிறீங்க..."என்று கத்த...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???