79

41 3 0
                                    

ஹெரால்டு கண் கலங்கி போய் நிற்க...

ஜெரோம் அவனுக்கு ஆதரவாக தோளை தட்டி கொடுத்து தன்னோடு அணைத்து கொண்டான்...

சிறிது நேரம் கழித்து ஹெரால்டு அவனை விட்டு விலகி கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு லியா வை பார்த்தான்...

அவளும் அழுதவாறு அவனை‌ பார்த்தாள்...

ஹெரால்டு அவளை நெருங்கி அவள் கண்ணீரை துடைத்தான்...

ஹெரால்டு : "நீ அழாத மா..."என்று தன் மார்பில் அணைத்து கொண்டு ஜெரோம் ஐ பார்த்தான்...

ஜெரோம் சங்கடத்துடன் "டேய்... எதுவும் பிரச்சனை இல்ல டா... நீயா ஏதேதோ நினைச்சுக்கிட்டு இருக்காத..."என்று சொல்ல...

ஹெரால்டு : "நா நினைக்கல... நீ தான் நினைக்கிற... எனக்கு என் தங்கச்சி மேல கோவம் இல்ல... வருத்தம் மட்டும் தான்... ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா னு தெரிஞ்சதும் என் தங்கச்சி என்‌ மேல நம்பிக்கை இல்லாம இப்படி பண்ணிட்டாளே னு வருத்தம்... இவ காதலிக்கிறா னு தெரிஞ்சதும் அந்த பையன பத்தி விசாரிச்சு அவனுக்கே இவளை கல்யாணம் பண்ணிக்கலாம் னு நினைச்சேன்... அது புரிஞ்சுக்காம இப்படி பண்ணிட்டா...

சரி என் தங்கச்சி ஆசைப்பட்ட வாழ்க்கை நல்லா இருக்கட்டும் னு நினைச்சு விட்டுட்டேன்... இருந்தாலும் மனசுல ஒரு ஓரத்துல கொஞ்சமா ஒரு உறுத்தல்...ஏதோ ஒன்னு தப்பா இருக்கு னு தோணுச்சு... அதனால அவனை பத்தி விசாரிச்சேன்... நா தெரிஞ்சுக்கிட்ட வரைக்கும் உத்தமா நல்ல விதமாக தான் சொன்னாங்க... ஆனா என்ன னு ஒரு 'க்' வச்சாங்க... தண்ணி அடிப்பான்... அது ஒரு கெட்ட பழக்கம் இருக்கு னு சொன்னாங்க...

இந்த காலத்துல யாரு தான் குடிக்காம இருக்கா... எல்லாருக்கும் அந்த பழக்கம் இருக்கு...இத வச்சு யோசிச்சு ஒன்னும் ஆக போறது இல்ல னு தான் விட்டு லியா சந்தோஷமா இருந்தா போதும் னு இருந்தேன்...அப்படி இருந்தும் மறுபடியும் ஒரு உறுத்தல்...என்‌ மனசுக்குள்ள ஒரு போராட்டமே நடந்துச்சு..ரெண்டு மனசா இருந்துச்சு... ஒன்னு ஏதோ சரி இல்ல னு சொல்லுது... இன்னொரு மனசு அப்படி இல்ல னு சொல்லுது...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now