30

84 4 0
                                    

உத்தமாவை அங்கேயே விட்டு சென்று ஜெரோம் சென்று விட்டு மீண்டும் வந்து உத்தமா அருகில் வண்டியை நிறுத்தினான்...

உத்தமா அவனையே பார்க்க...

ஜெரோம் : உட்காந்து தொல... விட்டுட்டு போகவும் மனசு ல...

உத்தம் பின்னால் அமர்ந்தான்...

**********

தன் அறையில் இருந்த லியா ஹெரால்டு குரல் கேட்டு வேகமாக வெளியே ஓடி வந்தாள்...

வாசலில் ஹெரால்டு சாம்லி ‌பாரதியுடன் பேசி கொண்டு இருக்க...

"அண்ணா..."என்று வேகமாக ஓடி வந்து ஹெரால்டு கட்டி‌ கொண்டாள்...

ஹெரால்டு : லியா...

லியா : "நீ வந்துட்டீயா அண்ணா... என்னைய மன்னிச்சுட்டீயா..."என்று அழுக...

ஹெரால்டு அவளை தன்னிடம் இருந்து விலகி அவள் கண்ணை துடைத்து விட்டு "அழாத மா... நாங்க இருக்கோம்... நீ என்ன தப்பு பண்ண... உனக்கு பிடிச்ச வாழ்க்கைய நீயே முடிவு பண்ணிட்ட... ஒரு‌ வார்த்தை எங்க கிட்ட சொல்லி இருக்கலாம் ல... சொல்லாம விட்டுட்டீயே தான் மா உன் மேல எங்களுக்கு கோவம்... மற்றப்படி நீ நல்லா சந்தோஷமா இருக்கனும் னு தான் நாங்க நினைக்கிறோம்..."என்று தன்னோடு அணைத்து கொண்டு தலை முடியை கொத்தி விட்டான்...

பாரதியும் சாம்லியும் அவர்களின் நிலையை புரிந்து கொண்டனர்...

பாரதி : சரி வாங்க உள்ள உட்காந்து பேசலாம்...

ஹெரால்டு : இல்லங்க... ஒரு விசயம் பேச தான் வந்தேன்...

சாம்லி : பேசலாம் brother... உள்ள உட்காந்து பேசலாமே..

ஹெரால்டு : அய்யோ sister அது தான் முடியாது...

சாம்லி : ஏன் முடியாது... நடக்க முடியலையா... கைய பிடிச்சு கூட்டிட்டு போகனுமா...

ஹெரால்டு : அது எல்லாம் இல்ல... நா நல்லா நடப்பேன்... எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல... இவங்களுக்கு கல்யாணம் ஆகும் போது நாங்களும் சரி நீங்களும் சரி கோவமா தான் இருந்தோம்...அந்த கோவத்துல ஏதாவது சொல்லி திட்டி இருப்போம் ல... அதுக்கு தான் மாதா தீர்த்தம் ஊத்தி ரெண்டு குடும்பமும் சமாதானம் ஆகிக்கலாமா னு கேட்க வந்தேன்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora