2

625 5 0
                                    

வலியுடன் நான் (நீ)

தூங்கி கொண்டு இருந்த ஹெரால்டு ஏதோ தோன்ற தூக்கம் கலைந்து வேகமாக எழுந்து பக்கத்து அறையை நோக்கி சென்றான்...

மெதுவாக கதவை திறந்து பார்க்க...

அவன் அம்மா உறங்கி கொண்டு இருந்தார் அறை முழுவதும் தன் பார்வையை சுழல விட்டவன் பதற்றதுடன் "அம்மா..."என்று கத்த...

அவன் அம்மா மலர்மணி சத்தம் கேட்டு திடுக்கென்று எழுந்து அமர்ந்து " என்ன டா... ஏன் டா கத்துன..."என்று கேட்க...

ஹெரால்டு : லியானா எங்க மா...

மலர் மணி : "லியா..."என தன் அருகில் பார்த்து "இங்க தானே என் கூட படுத்திருந்தா எங்க போனா பாத்ரூம்ல இருப்பாளோ..."என்று எழுந்து பாத்ரூம் கதவை தட்டி "லியா லியா உள்ள தானே இருக்க பேசு லியா..."

கடுப்பான ஹெரால்டு "ம்மா அவ ஓடிட்டா..."என்று கத்த அதிர்ந்து போனார்

சத்தம் கேட்டு அவன் அப்பா ஆசிர்வாதம் தன் அறைக்குள் இருந்து வெளியே வந்தார்...

சிறிது நேரத்தில் அவன் பெரிய அக்கா இசபெல்லாவும் அவள் கணவன் அலோசியஸ் சின்ன அக்கா கிறிஸ்டினாவும் அவள் கணவன் வில்லியம் வந்திருந்தனர்‌...

இசபெல்லா : நா அப்போவே சொன்னேன்... நீங்க யாரு கேட்டீங்க... ரொம்ப செல்லம் கெடுக்க வேணாம் இது சரி இல்ல னு... இப்ப பாத்தீங்களா...

ஹெரால்டு : நீ வாய மூடு கா...நீ மட்டும் ஒழுங்கா... நீயும் கூட்டிட்டு ஓடி போய் தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட... அவளை மட்டும் குறை சொல்ற...

கிறிஸ்டினா : ஹெரால்டு முத அவ எதுக்கு சொல்றா னு கேளு...

ஹெரால்டு : நீயும் அவளுக்கு support பண்ணுவ... நீயும் love marriage தானே... என்ன நீ வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்ட... இவ ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அவ ஓடி போயிட்டா... கல்யாணம் ஆகிருச்சா னு தெரியல...

அலோசியஸ் : நீ சொல்றது சரி தான் மச்சான்... நாங்க ஓடி போய் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... நாங்க ஒரே மதத்துல தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... ஆனா லியா ஒரு இந்து பையனை காதலிச்சு அவனை நம்பி ஓடி போயிட்டாளே...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن