நேரம் காலை 11.10
உத்தமா மெதுவாக கண் விழித்தான்...
அறை முழுவதும் வெளிச்சம் பரவி இருந்தது...
உத்தமா : "லியா... லியா..."என்று கத்த...
அவன் கத்தியது கீழே வரை கேட்டது...
பாரதி மட்டும் வீட்டில் இருக்க...
சாம்லிக்கு call செய்து வர சொன்னாள்...
சாம்லி : சொல்லு பாரதி...
பாரதி : என்ன டி பண்ற...
சாம்லி : வேற என்ன பண்ண போறேன்... TV தான் பாக்குறேன்...
பாரதி : சரி தான்... இங்க பூகம்பம் வெடிக்க போகுது... நா ஒருத்தி மட்டும் எப்படி சமாளிக்கிறது... நீ வா டி...
சாம்லி : என்ன டி உலர்ற...
பாரதி : அட இந்த உத்தமா எழுந்துட்டான்...இப்பவே லியா லியா னு அவளை தான் கூப்டுறான்... அவ இல்ல னு தெரிஞ்சா என்ன பண்றது னு தெரியல... வீட்டுல வேற யாரும் இல்ல... என்னால அவனை சமாளிக்க முடியாது மா... நீயும் வா...
சாம்லி : சரி இரு வரேன்... அது வரைக்கும் அவன் என்ன பேசுனாலும் எதுவும் பேசாத...
பாரதி : "சரி சரி நீ வா..."என்று call ஐ cut செய்து விட்டு மேலே பார்த்தாள்...
*********
ஜோனா லியா முகத்தையே பார்த்தாள்...
லியா : என்ன ஜோனா...
ஜோனா : நா கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல லியா... நீ சந்தோஷமா இருப்ப னு தான் நினைச்சேன்... ஆனா...
ஜோனாவின் பேச்சு துண்டிட்டாள் லியா...
லியா : பேசாம இரு ஜோனா... அப்பா அம்மாவுக்கு தெரிய வேணாம்... முக்கியமா ஹெரால்டு அண்ணாவுக்கு தெரிய வேணாம்... அவ்ளோ தான்... உத்தமா வ அடிச்சாலும் அடிச்சுடும்... இந்த விசயம் ஜெரோம் அண்ணாவுக்கு மட்டும் தான் தெரியும்....
ஜோனா : அவனுக்கு தெரியுமா... என்ன கிட்ட சொல்லவே இல்ல பாத்தீயா...
லியா : நா தான் யாருக்கும் சொல்லாத னு சொல்லி வச்சு இருந்தேன்...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???