67

60 2 0
                                    

சாம்லி சொன்னதை கேட்டு முத்துராமன் யோசித்தார்...

அறிவு : அப்பா சாம்லி சொல்றது சரி தான்... இப்ப பேசி எந்த பிரயோஜனமும் இல்ல... இப்ப அவன் அவனா இல்ல... என்ன சொன்னாலும் காதுல விழாது... அவன் ஏத்துக்கவும் ‌மாட்டான்... விடியட்டும் அவன் குடிச்ச போதை எல்லாம் இறங்கிடும்... அப்போ பேசிக்கலாம்...

முத்துராமன் : சரி இவனை இழுத்துட்டு போய் மாடில போடுங்க... கதவை பூட்டிட்டு வாங்க... லியா இங்கேயே தூங்கட்டும்...

அறிவும் நல்லாவும் அவனை இழுத்து கொண்டு செல்ல...

உத்தமா அசிங்கமா பேச... நல்லா அவன் வாயில் அடித்து இழுத்து கொண்டு மாடியில் போட்டு பூட்டி விட்டு வந்தனர்...

சாம்லி : அப்பா அப்புறம் இன்னொரு விசயம்...

முத்துராமன் : என்ன மா...

சாம்லி : அது வந்து காலைல லியா அப்பா அம்மா வ வர சொல்லி லியா வ கூட்டிட்டு போக சொல்லலாம்... 

முத்துராமன் மறு நொடி யோசிக்காமல் " தாராளமா... அவங்க வந்து கூட்டிட்டு போகட்டும்..."என்று அறிவு நல்லா வை பார்த்து " என்ன பா சொல்றீங்க..."என்று கேட்க...

அறிவு, நல்லா : ம்ம்ம்... போகட்டும் பா... 

முத்துராமன் பாரதியை பார்க்க...

பாரதி : நா மறுப்பே சொல்ல மாட்டேன் மாமா... இங்க இருந்து லியா இவன் கூட சண்டை போடுறதுக்கு அங்க போய் நிம்மதியா இருக்கட்டும்... பிரிச்சு இருந்தா தான் அவனுக்கு அப்போ தான் புத்தி வரும்... அப்போயாவது ஒழுங்கா இருக்கானா னு பாக்கலாம்...

முத்துராமன் : "நீ சொல்றது சரி மா... நா லியா அப்பா கிட்ட சொல்லி வர சொல்றேன்..."என்று mobile ஐ எடுத்து கொண்டு அங்கே இருந்து நகர...

அறிவு : பாரதி லியாவுக்கு எதுவும் அடி படலையே...

சாம்லி : என்ன அறிவு ரொம்ப சீக்கிரம் கேட்குறீங்க...

பாரதி :"சும்மாவே இருக்க மாட்டீயா சாம்லி..."என்று அவள் தோளில் செல்லமாக அடித்து விட்டு " இல்ல... கொஞ்சம் இல்ல... நகர்ந்துட்டா... இல்ல அவ மேல தான் விழுந்து இருக்கு..."என்று சொல்ல...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now