உத்தமாவின் முகத்தில் கோவமும் கண்ணீரும் சூழந்து இருந்தது...
லியா அவன் கையை இறுக்கி பிடித்தாள்...
உத்தமா : என் அக்கா இப்படி பண்ணுவா னு யாருமே நினைக்கவே இல்ல... யாருமே எதிர்ப்பாக்காத ஒன்னு... யாரும் எதுவும் பண்ண முடியாம போச்சு... எல்லாரும் சேர்ந்து Police complaint கொடுக்கலாம் னு முடிவு பண்ணா... என் அக்கா எல்லாரும் முன்னாடி வந்து அவனுக்கே என்னைய கல்யாணம் பண்ணி வைங்க னு சொல்லிட்டா...
நல்லா அண்ணே எல்லாருமா முன்னாடி வச்சு சித்திரை அக்கா வ திட்டுனான்... ஆனா சித்திரை அக்கா முடிவா இருந்தா... அறிவு அண்ணா தான் என்ன னு பொறுமையா கேட்டாரு...
அதுக்கு அவ என்ன பதில் சொன்னா னு தெரியுமா... இவன் என்னைய கெடுத்துட்டான் னு police complaint கொடுத்து இவன் பண்ண தப்புக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம்...
ஆனா நா என்ன தப்பு பண்ணேன்... எனக்கு என்ன பண்ண போறீங்க... கொஞ்சம் நாள் விடுவீங்க... அப்புறம் வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்க சொல்லுவீங்க... என்னால எப்படி இன்னொருத்தனை ஏமாத்த முடியும்... இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால சந்தோஷமா இருக்க முடியாது...
அவன் சந்தோஷத்தையும் கெடுத்து என் நிம்மதி சந்தோஷம் எல்லாம் போய் எதுக்கு வீண் பிரச்சனை... அதுக்கு இன்பமோ துன்பமோ இவன் கூடவே நா காலத்தை கழிச்சுக்கிறேன்... யாரும் எதுவும் பேச முடியல... என் அப்பா எவ்வளவோ சொல்லியும் அவ கேட்கல...
வேற வழி இல்லாம அவனுக்கு என் அக்காவ கல்யாணம் பண்ணி வச்சாரு... கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ரெண்டு பேரும் இங்க இருந்தாங்க... அவன் கடலூர்... இங்க இருந்து போகுறதுக்கே நாலு மணி நேரத்துக்கு மேல் ஆகும்... ஒரு வாரம் என் அக்கா வேண்டா வெறுப்பா தான் அவன் கூட இருந்தா... ஊருக்கு போகனும் சொல்லவும் வேற வழி இல்லாம என் அப்பா அண்ணா அனுப்பி வச்சாங்க..."என்று சொல்லியவாறு நிறுத்தி கொண்டான்...
லியா :என்ன யா ஆச்சு...
உத்தமா அவள் தோளில் சாய்ந்து "ஒரு மாசம் ஆச்சு... நல்லா தான் போச்சு... அந்த நாள் அந்த ஒரு நாள் நாங்க யாரும் எதிர்ப்பார்க்க விசயம் நடந்துச்சு... என் அக்கா இறந்த செய்தி... எங்க தலைல இடியா வந்து விழுந்துச்சு... பொண்ணுங்க இல்லாத வீடு... நாலு ஆம்பளைங்க என்ன பண்றது னு தெரியல...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
