87

168 4 0
                                        

உத்தமாவின் வார்த்தையில் துடிதுடித்து போனான் ஜெரோம்...

அவனால் அந்த வார்த்தையை தாங்கி கொள்ள முடியவில்லை...

சிறு வயதில் இருந்து தன் கூடவே வளரந்தவள்... உடன் பிறக்கவில்லை என்றாலும் அவளை தன் தங்கையாகவே நினைத்தான்...

ஒரு அண்ணன் தங்கை போல் இருக்கும் தங்களை சேர்ந்து வைத்து அசிங்கமா பேசியது அவன் இதயமே வெடிப்பது போல் இருந்தது...

உத்தமா கன்னத்தில் அறை விழ...தடுமாறி நின்றவள் நிமிர்ந்து பார்க்க... கண் சிவந்து கோவத்துடன் நின்றான் ஹெரால்டு...

"டேய்..."என்று எகிறி கொண்டு வந்த உத்தமா வை மறுபடியும் ஓங்கி அறைந்தான் ஹெரால்டு...

கண் கலங்கி அசைவற்று நின்றான் ஜெரோம்...

அவன் காதில் மறுபடி மறுபடியும் உத்தமா சொன்ன வார்த்தை விழுவது போல் இருக்க...

காதை பொத்தி கொண்டு "ஹஹஹஹ..."என்று கத்தி கொண்டு பல்லை கடித்து அவன் வயிற்றில் எட்டி உதைத்தான்...

தாங்க முடியாத வேதனையும் கோவமும் அழுகையும் ஒன்று சேர "என்ன வார்த்தை டா சொன்ன... லியா என் தங்கச்சி டா... இப்படி ஒரு வார்த்தை கேட்ட உடனே நா செத்து போய் இருக்கனும் டா... எப்படி டா உன்னால இப்படி கேட்க முடிஞ்சுது... இப்படி கேட்டதுக்கு பதிலா என்னைய கொன்று போட்டு இருக்கலாம்... இதே கேள்விய நீ ஹெரால்டு ஹ பாத்து கேட்டு இருப்பீயா டா... நா யாரோ தானே டா... அவ பொண்ணு நா பையன்... அப்படி தானே நினைக்கிற... வேற வேற‌ வயித்துல பொறந்தாலும் அண்ணன் தங்கச்சியா இருக்க கூடாதா டா... ஹெரால்டு அவளுக்கு எப்படியோ அது மாதிரி தான் டா நானும் அவளுக்கு...லியாவுக்கு மட்டும்  தெரிஞ்சா... அய்யோ அவ எப்படி தாங்குவா..."என்று கதறினான் ஜெரோம்...

உத்தமா திமிராக நிற்க...

ஹெரால்டுக்கு அவனை பார்க்க பார்க்க கோவமாக வந்தது...

ஹெரால்டு : "நரம்பில்லாத நாக்குனா என்ன‌ வேணும்னாலும் பேசுவீயா டா நாதாரி... நீ எல்லாம் கல்யாணமே பண்ணி  இருக்க கூடாது டா…"என்று அவனை அடிக்க போக...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now