பாரதி வீட்டிற்கு பின் புறம் ஓடி வந்தாள்...
சாம்லி : உன் வேலை என்னமோ அத மட்டும் பாக்க வேண்டியது தானே... எதுக்கு தேவை இல்லாத விசயத்துல தலையிடுற..
பாரதி தலையில் அடித்து கொண்டு "அடியேய் சாம்லி..."என்று கத்தி கொண்டே அவளே பிடித்து இழுத்து வாயை பொத்த...
சாம்லி அவளை கையை எடுத்து விட்டு "இனிமே தேவை இல்லாத விசயத்துல நீ தலையிட்ட... நா சும்மா இருக்க மாட்டேன்... முத உங்க மாதிரியான பொம்பளைங்களை தான் ஊரை விட்டு விரட்டனும்... முத உங்க வீட்டுல நாரி கிடக்குற சாக்கடை ய சுத்தம் பண்ணு... அதுக்கு அப்புறம் அடுத்தவங்க வீட்டுல இருக்கு சாக்கடை ய சுத்தம் பண்ண சொல்லுவ..."என்று கத்த...
லியா : அய்யோ சாம்... என்ன இது...
சாம்லி : நீ சும்மா இரு லியா... இவ என்ன பண்ணி இருக்கா னு தெரியுமா...
லியா : என்ன வேணும்னாலும் பண்ணி இருக்கட்டும்... அதுக்கு இப்படி ரோட்டுல நின்னு கத்துனா நல்லவா இருக்கு... நீ முத வீட்டுக்கு வா...பேசிக்கலாம்...
சாம்லி : நீ விடு லியா... இவளை ஒரு அடியாழது அடிச்சா தான் என் மனசு ஆறும்...
பாரதியும் லியாவும் அவளை இழுத்து கொண்டு உள்ளே செல்ல...
சாம்லியிடம் திட்டு வாங்கி கொண்டு இருந்த குட்டச்சி என்று அனைவராலும் சொல்லப்படும் பொன்னம்மா திருதிருவென முழித்து கொண்டு இருந்தாள்...
பாரதி வெளியே வந்து பொன்னம்மா வை பார்த்து "பொன்னம்மா அவளுக்காக நா மன்னிப்பு கேட்டுக்கிறேன்... மன்னிச்சோங்க...
பொன்னம்மா : என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... என்னைய பாத்தா எப்படி தெரியுது... நா பாட்டுக்கு நா உண்டு என் வெலை உண்டு னு போயிட்டு இருந்தவளை கூட்டு வச்சு சண்டை போடுறா... ஏன் எதுக்கு சண்டை போட்டா னு கூட தெரியல...
பாரதி : அய்யோ நா மன்னிச்சோக்கோ னு சொல்றேன் ல... எதுக்கு வீணா கத்திக்கிட்டு இருக்க... நீ போ...
பொன்னம்மா : "நல்லா இருக்கே கதை... நீங்களா கூட்டு வச்சு சண்டைக்கு வருவீங்க... நீங்களா போக சொல்லுவீங்க... ஏன் னு கேட்டா...கத்துற மாதிரி தெரியுதா...நல்லா இருக்கே நியாயம்..."என்று கத்த..

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???