லியா தன் அறையில் ஜன்னலில் வழியே வேடிக்கை பார்த்தவாறு ஏதோ யோசனையில் இருந்தாள்...
கீழே வண்டி சத்தம் கேட்க...
லியா வேகமாக வெளியே வந்து மாடியில் இருந்து கீழே எட்டி பார்க்க...
உத்தமா ரெண்டு ரெண்டு படியாக தாவி ஏறி வந்தான்...
லியா உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்...
உத்தமா உள்ளே நுழைய... லியா நாற்காலியில் அமர்ந்து இருக்க...
உத்தமா அவளை பார்த்தா கொண்டே அங்கே இருந்த மேஜை மேல் வண்டி சாவியை வைத்து விட்டு கட்டிலில் படுத்து mobile எடுத்து தோண்டி கொண்டு இருந்தான்...
லியா அவனை பார்த்து விட்டு திரும்பி கொள்ள...
உத்தமா அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே இருந்தான்...
அரை மணி நேரம் கழிய...
உத்தமா : லியா
லியா திரும்பாமல் அமர்ந்திருக்க...
உத்தமா : லியா...
லியா அசையாமல் இருக்க...
உத்தமா : உன்னையே தான் டி கூப்டுறேன்...
லியா அவனை பார்க்க...
உத்தமா : பசிக்கிது சாப்பாடு எடுத்துட்டு வா...
லியா அவனையே பார்த்து கொண்டே இருந்தாள்...
உத்தமா கடுப்பாகி "உன் காது கேட்கலை யா... பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு வா னு சொன்னேன்..."என்று கத்த.
லியா முகத்தை திரும்பி கொண்டு எழுந்து சென்றாள்...
உத்தமா அவள் போன திசையையே கோவமாக பார்த்து கொண்டு இருந்தான்...
லியா தனி தனி பாத்திரத்தில் சாதம் குழம்பு பொரியல் ஒரு தட்டு எடுத்து வந்து வைக்க...
உத்தமா : எனக்கு ஆம்லேட் வேணும்...
லியா நிமிர்ந்து பார்த்து விட்டு எழுந்து செல்ல...
உத்தமா தரையில் அமர்ந்து வாசலையே பார்த்து கொண்டு இருந்தான்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???