அறிவு சொன்னதை கேட்டு லியா வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள்...
பாரதியும் சாம்லியும் அவளை குறுகுறுவென பார்க்க...
அறிவு பதறி போய் "அம்மாடி எதுக்கு மா இப்படி சிரிக்கிற... வயித்துல குழந்தை இருக்கு மா...சிரிக்காத மா..."என்று சொல்ல
லியா சிரிப்பு இன்னும் அதிகமானது...
பாரதி : லியா சிரிக்காத...
லியா : சிரிக்காம என்ன கா பண்ண சொல்றீங்க...
சாம்லி : அடியேய் சிரிக்காம எதுக்கு சிரிக்கிற னு விசயத்தை சொல்லு டி...
லியா : நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் திடீர் காதல் இல்ல...
பாரதி : அப்புறம்...
லியா சிரித்து கொண்டே"ஜோனா ஜெரோம் அண்ணாவோட மாமா பொண்ணு..."என்று சொல்ல...
அறிவு : ஏதே...அதனால தான் அந்த பொண்ணு இவனை பாத்து முறைச்சாளா...
லியா : ஆமா... அவங்க already love பண்ணிட்டு தான் இருக்காங்க...
அறிவு : பாத்தா அப்படி தெரியலையே... நா கேட்டப்போ கூட என்னைய எல்லாம் யாரு காதலிப்பா னு கேட்டான்..
நீ என்னடா னா காதலிக்கறதா சொல்ற...லியா : ஜெரோம் அண்ணா love பண்ற விசயம் எனக்கும் ஹெரால்டு அண்ணாவுக்கு மட்டும் தான் தெரியும்... என் வீட்டுக்காருக்கு கூட தெரியாது... மாமா பொண்ணு இருக்கு னு தெரியும்... காதலிக்கிறது தெரியாது...
சாம்லி : ரெண்டு பேரும் love பண்றாங்க னு சொல்ற... ஆனா ஏன் அந்த பொண்ணு அவனை முறைச்சுட்டு போகுது...
லியா : எல்லாம் கோவம் தான்... ஜெரோ அண்ணா பண்ண வேலை அப்படி...
பாரதி : என்ன சொல்ற...அவன் love பண்ற விசயத்தை நம்ப முடியல... நீ என்னமோ புதிர் போடுற...
லியா : நம்பி தான் ஆகனும்... ஜெரோம் அண்ணாவும் ஜோனாவும் சின்னது ல இருந்தேன் love பண்றாங்க... ஜெரோம் அண்ணா அப்பாவுக்கும் ஜோனா அப்பாவும் ஏதோ பிரச்சனை... பேச்சு வார்த்தை இல்ல... அதுவும் இவங்களுக்கு எல்லாம் இல்ல... அவங்க அப்பாவுக்கும் இவங்க அப்பாவுக்கும் மட்டும் தான்..ஆனா மத்த எல்லாரும் பேசிக்குவாங்க... ஜோனா madical college join பண்ணும் போது hostel ல சேர்த்துட்டாங்க...

ESTÁS LEYENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficción Generalஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???