லியா புரியாமல் விழித்தவாறு உத்தமா வை பார்த்து "இவங்களுக்கு என்ன ஆச்சு...ஏன் ஒரு மாதிரி நடந்துக்குறாங்க..."என்று கேட்க...
உத்தமா சிரித்து கொண்டே "அதுவா நீ மாடிக்கு வா... நா சொல்றேன்..."என்று அவள் கையை பிடித்து மாடியில் இருக்கும் தன் அறைக்கு அழைத்து சென்றான்...
தன் அறை கதவை திறந்து light on செய்ய... அறை முழுவதும் கலைந்து குப்பை கிடங்கு போல் காட்சி அளித்தது...
லியா : என்ன டா இது... இப்படி இருக்கு... வீட்டா இல்ல குப்பைக் கிடங்கா...
உத்தமா : இது தான் என்னோட room... இல்ல நம்ம room... எப்படி இருக்கு...
லியா : கேவலமா இருக்கு... ஆளை பாரு இப்படி தான் வீட்டை வச்சுக்குவீயா மனுஷன் இருப்பானா டா...
உத்தமா : என்ன டி இப்படி சொல்லிட்ட...அது தான் இருக்கேனே...
லியா : அப்புறம் room ஹ இது... குப்பை கிடங்கு மாதிரி இதுல எப்படி நீ இருக்குற...
உத்தமா : அடியேய் கலைஞ்சு இருந்தா தான் room... Clean ஹ இருந்தா நல்லவா இருக்கும்...
லியா :"அச்சோ..."என்று தலையில் அடித்து கொண்டு "நல்லா பேசுறீங்க... முத இப்படி வந்து உட்காருங்க... நா சுத்தம் பண்றேன்..."என்று அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்து சுடிதார் துப்பட்டாவை முடிச்சு போட...
உத்தமா :"என்னது..." என்று பதறி போய் "காரியத்தையே கெடுத்துவ போலேயே..." என்று அவளை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்து "சுத்தம் அப்புறம் பண்ணிக்கலாம்... இப்போ..."என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து இடுப்பை பிடிக்க..
லியா அவன் கையை தட்டி அவனை விட்டு விலகி "என்ன பண்ற நீ..."என்று கேட்க...
உத்தமா : ஏன் என்ன டி... நா தொட கூடாதா... எனக்கு உரிமை இல்லையா...
லியா : "ப்ச்... யாரு இல்லனு சொன்னா... ஆனா..."என்று இழுக்க...
உத்தமா எழுந்து அவள் அருகில் அவளை கட்டி கொண்டு "ஆனா... என்ன னு சொல்லு..."என்று கேட்கும் போதே அவன் கையை எல்லை மீற முயல...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???