அறிவு தன் அப்பாவிற்கும் நல்லச்செல்வத்திற்கும் call செய்து விசயத்தை சொல்ல...
இருவரும் சந்தோஷத்தில் உடனே கிளம்பி வருவதாக சொல்ல...
சாம்லி வசந்தா பார்த்ததும் அவளை நோக்கி சென்றாள்...
சாம்லி : என்ன வசந்தா madam... அமைதியா இருக்கீங்க...
வசந்தா : என்ன வேணும்...
சாம்லி : நீங்க ஒன்னு சொன்னீங்க... ஞாபகம்... இருக்கா...
வசந்தா : என்ன சொல்ற... நா என்ன சொன்னேன்...
சாம்லி : ஓ... மறந்து போச்சா... இப்ப பேசுனதையே மறந்துட்டீங்க... ஒன்னும் பிரச்சினை இல்ல... Hospital ல தான் இருக்கோம்... Check up பண்ணிடலாம்... ஞாபகம் மறதி இருக்கு என்ன பண்ணலாம்...
வசந்தா : ஏய் உன் பிரச்சனை என்ன...
சாம்லி புன்னகைத்து விட்டு " இப்ப தான் சொன்னீங்க... லியா வந்த நேரம் இப்படி ஆகிருச்சு னு அது சரி தான்... ஆனா அவ வந்த நேரம் தான் வீட்டுல நல்ல விசயம் நடந்து இருக்கு...அது முத ஞாபகம் இருக்கட்டும்..."என்று சொல்ல...
வசந்தா : என்ன விட்டா பேசிக்கிட்டே போற... என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ...
சாம்லி : நா பேசுவேன்...
வசந்தா : இது எங்க குடும்ப பிரச்சனை... இதுல நீ ஏன் தலையிடுற...
லியா : hello... இது சரி இல்ல... என்னைய பத்தி பேச நீங்க யாரு...
வசந்தா : நம்ம குடும்ப விசயத்தை அப்புறம் பேசிக்கலாம்... முத இதுல தலையிட இவ யாரு...
லியா : இவ என் அண்ணி... எட்வின் என் அண்ணா... போதுமா... அவங்க கேட்குறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு...
சாம்லி லியா வை பார்க்க... லியா அவளை பார்த்து கண் அடித்தாள்...
லியா : "சாம் நீ வா போலாம்..."என்று அவள் கையை பிடித்து அழைத்து செல்ல...
வசந்தா சிலையாகி போனாள்...
சாம்லி : ஆமா நீ என்ன பேசுன...
லியா : என்ன பேசுனேன் னு முக்கியம் இல்ல... எப்படி பேசுனேன் அது தான் முக்கியம்... நா அவங்களை எதிர்த்து பேசிட்டேன்ங்குற shock ல இருந்து வெளிய வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும்...வாங்க விட்டுட்டு போலாம்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???