81

52 2 0
                                    

"இப்ப என்ன நா பேச கூடாது... அவ்ளோ தானே... பேசுங்க... நீங்க பேசுங்க..."என்று அங்கே ஓரத்தில் இருந்து நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து வாயில் விரல் வைத்து கொண்டான் ஹெரால்டு...

ஜெரோம் அவனை பார்த்து மெலிதாக சிரித்து விட்டு அவனை நெருங்கி விரலை தட்டி விட்டான்...

ஹெரால்டு :"ப்ச்..."என்று முறைக்க...

ஜெரோம் : "நீ அந்த chair ஹ இழுத்து போட்டு உட்காந்த பாரு... அதுக்கு வாய் இருந்திருந்தா அழுது இருக்கும்... எதுக்கு டா உனக்கு இவ்ளோ கோவம்..."என்று அவன் தோளில் கை வைக்க...

ஹெரால்டு கையை தட்டி விட்டு கை கட்டி கொண்டு எங்கேயோ பார்த்தான்...

ஜெரோம் திரும்பி அனைவரையும் பார்க்க...

கிறிஸ்டினா "விடு..."சைகை செய்ய...

ஜெரோம் "சரி..."என்பது தலை ஆட்டினான்...

முத்துராமன் : நீங்க இப்ப என்ன பேசனுமோ பேசுங்க... உங்க மனசுல இருக்குறத சொல்லுங்க... எங்க கிட்ட கோவம் இருந்தாலும் அதையும் சொல்லுங்க... கேட்டுக்குறோம்...

ஆசீர்வாதம் ஹெரால்டு ஐ பார்க்க...

ஹெரால்டு எதையும் கண்டு கொள்ளாதது போல் எங்கேயோ பார்த்தான்...

ஆசீர்வாதம் : எங்க கிட்ட இருக்குற ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்‌.. அதுக்கு மட்டும் பதில் கிடைச்சா எல்லாத்துக்கு பதில் கிடைச்சா மாதிரி தான்...

பாரதி : அப்பா அது தான் நீங்க கேளுங்க னு சொல்றோம்... தயங்க வேணாம்...

ஆசீர்வாதம் : அப்படி இல்ல மா... இன்னக்கி பேசிடலாம்... நாளைக்கி நல்ல காரியம் நடக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கனுமே... சங்கடமா இருக்கு... அது தான்...

சாம்லி : ப்ச் அப்பா அப்படி எல்லாம் யோசிச்சா வேலைக்கு ஆகுமா... நீங்க கேள்வி கேட்காம இருந்தா தைரியம் அதிகமாகிரும்...

ஜெரோம் : எந்த தைரியம் அதிகமாகிரும்...

சாம்லி : தன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க... நம்ம என்ன வேணும்னாலும் பண்ணலாங்குற தைரியம் தான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now