ஹெரால்டு உத்தமா வை முறைத்தவாறு திரும்பி லியா வை பார்க்க...
உத்தமா ஒரு பயத்துடன் பார்த்தான்...
லியா அவனை பார்த்ததும் தலை குனிந்தாள்...
ஹெரால்டு : இவன் என்ன பண்ணான் ஜெரோம்...
ஜெரோம் ராத்திரி நடந்த விசயத்தை சொல்ல...
ஹெரால்டு பல்லை கடித்து கொண்டு கையை முறுக்கி உத்தமா வை நோக்கி குத்த ஓங்க...
லியா : "அண்ணா..."என்று பதற...
ஹெரால்டு ஓங்கி கையை கட்டிலில் குத்தினான்...
லியா அவன் கையை பிடித்து அழுதாள்...
லியா : ஏன் அண்ணா இப்படி பண்ற..
ஹெரால்டு : "என்னால ஒன்னும் பண்ண முடியல ல... ஒரு அண்ணனா தங்கச்சி ய நல்லா பாத்துக்க முடியல..."என்று கண் கலங்க...
லியா :"அண்ணா..."என்று அவனை கட்டி கொண்டு அழுதாள்...
ஹெரால்டு அவள் தலையை தடவி கொடுத்து "இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை மா... எங்களால இவனை கேள்வி கேட்க கூட முடியாது... எனக்கு எதுவுமே தெரியாது னு நினைச்சுட்டு இருக்கீயா மா... எனக்கு எல்லாமே தெரியும் மா... அங்க நடக்குற ஒவ்வொரு விசயத்தையும் நா தெரிஞ்சுக்கிட்டு தான் இருக்கேன்... இவன் உன்னைய ஒவ்வொரு தடவையும் அடிக்கும் போது உன்னையே தூக்கி வளர்த்த இந்த கையில இருக்குற நரம்பு எல்லாம் வெடிக்குது மா...கை கால் ஹ உடைச்சு ஒரு மூளை ல போடலாம் னு போல இருக்கு... ஆனா உன் வாழ்க்கை வீணா போயிடுமே... அதுவும் இல்லாம நீ வருத்தப்படுவ... கஷ்டப்படுவ அத என்னால பாக்க முடியாது...உனக்காக தான் மா நா அமைதியா இருக்கேன்..."என்று வருத்தத்துடன் சொல்ல...
லியா அவனை விட்டு விலகி "நீ தான் சொன்னீயா..."என்பது போல் ஜெரோம் ஐ பார்க்க...
அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஜெரோம் வேகமாக தலையை இடது வலமாக ஆட்டி "ஏ என்ன என்னைய பாக்குற... நா நா சொல்லல... எனக்கே நேத்து நடந்த விசயம் இப்ப தான் தெரியும்..."என்று சொல்ல...
أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
