பாரதி சாம்லி லியா மூவரும் வாயை பொத்தி கொண்டு சிரிக்க...
ஜெரோம் : யோவ் மாமா இதுக்கு முன் அனுபவம் தேவை இல்லை...
எட்வின் : டேய் உன் கிட்ட எத்தனை தடவ சொல்றது...மாமா னு சொல்லாத னு... நீ என் மகனுக்கு ஞானப்பா டா... எனக்கு தம்பி வேணும்... அண்ணா னு சொல்லு இல்ல... எட்வின் னு பேரை சொல்லி கூப்டு... மாமா சொல்லி முறையை மாட்டாத டா...
ஜெரோம் : என்னைய என்ன யா பண்ண சொல்ற... மாமா னு சொல்லியே பழகிட்டேன்... நீ திடீர் னு வந்து என்னைய அண்ணா னு சொல்லு னு சொன்னா நா எப்படி யா சொல்ல முடியும்... சட்டு னு வர மாட்டேங்குது...
ஜோனா எழுந்து இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்...
எட்வின் உத்தமா அறிவு நல்லா நால்வரும் பின்னால் பார்த்து விட்டு ஜெரோமை பார்த்து தலையை ஆட்ட...
ஜெரோம் அவர்களை கவனிக்காமல் "முன் அனுபவம் இருக்குறவங்களை பார்த்தாலே போதும்... நமக்கு எல்லாம் விளங்கிடும்... கல்யாணத்துக்கு முன்னாடியே என் மேல அவ கோவமா இருந்தா என் பொண்டாட்டி கிட்ட எப்படி மன்னிப்பு கேட்டுக்கிட்டு பின்னாடியே சுத்துவாங்களோ அதே மாதிரி தான் இருந்தேன்... கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எந்த வித்தியாசமும் இல்ல... ஒரே மாதிரி தான்... என்ன இப்ப அவ கழுத்துல தாலி கட்டி இருக்கேன் அவ்ளோ தான்... No changed... அப்படியே தான் இருக்கு..."என்று சோகத்துடன் சொல்ல...
உத்தமா : உன் தலை எழுத்து என்ன பண்ண முடியும்...
ஜெரோம் : ஆமா... குழி ல விழுந்தாச்சு... இனி எழுந்திரிக்க முடியாது...
அறிவு : செத்த டா மவனே...
ஜெரோம் : நீங்க என்ன சொல்றீங்க...
நல்லா : இதுக்காக நாங்க பொறுப்பாக முடியாது... நீயா தான் சொன்ன....
ஜெரோம் : விளங்க வில்லையே...
எட்வின் : ராசா பின்னாடி திரும்பி பாரு...
ஜெரோம் திருதிருவென விழித்தவாறு திரும்பி பார்த்து "oh my Jesus..."என்று எழுந்து ஓட முயன்று தடுமாறி உத்தமா மேல் விழ..

أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???