43

78 2 0
                                    

லியா தயங்கியவாறு நிற்க...

முத்துராமன் : ஏதோ கேட்கனும் னு நினைக்கிற.... எதுவா இருந்தாலும் கேளு மா... ஏன் தயங்குற...

லியா உத்தமா வை பார்க்க...

உத்தமா : என்ன டி வேணும் உனக்கு... எதுக்கு இப்படி முழிக்கிற...

லியா : நா முழிக்கல பாக்குறேன்... ஏன் இந்த விசயத்தை என் கிட்ட இருந்து மறைச்சீங்க...

உத்தமா : என்ன மறச்சாங்க...

லியா : என்ன மறச்சாங்களா... இப்ப தான் மாமா சொன்னாரு... நாலு பிள்ளைங்களை வளர்த்தேன்... நாலும் உங்க அம்மா வயித்துல இருக்கும் போது நா தான் பாத்துக்கிட்டேன் னு... உங்க கூட பிறந்தவங்கள ல இன்னும் ஒருத்தவங்க இருக்காங்க னு ஏன் சொல்லல...

முத்துராமன் உத்தமா வை பார்த்து " ஏன் டா உனக்கு ஒரு அக்கா இருந்துச்சு னு அந்த பொண்ணு கிட்ட சொல்லவே இல்லையா..."என்று கேட்க...

லியா : அக்கா வா...

முத்துராமன் : "ஆமா மா... எனக்கு மொத்த நாலு பிள்ளைகள... மூனு பையன் ஒரு பொண்ணு... மூத்தவரு தான் நல்லசெல்வன்...இந்த பேரு வச்சவரு என் முதலாளி... வேலை கிடைக்காம தெரு தெருவாக சுத்திட்டு இருந்தேன்‌... அவரு தான் என் மேல பாவம் பாத்து எனக்கு வேலை கொடுத்தாரு...

அதனால அவர் மேல் தனி மரியாதை இருக்கும்... எனக்கு கல்யாணம் பண்ணி வச்சவரே அவரு தான்... என் முதலாளி தமிழ் பற்று உள்ள ஆளு... என் முத பையன் பொறந்ததும் என் முதலாளி கிட்ட கூட்டிட்டு என் குழந்தைக்கு பேரு வைங்க னு சொன்னேனா... நீ எப்பவும் நல்லப்படியா இருக்கனும்‌..

அந்த குழந்தை தான் அதுக்கு முதற்ப்படி... அதனால் இந்த குழந்தைக்கு நல்லசெல்வன் னு பேரா வைக்கிறேன் னு வைச்சாரு...அடுத்த ரெண்டு வருஷத்துல ஒரு பொண்ணு பொறந்துச்சு...
அந்த பொண்ணையும் என் முதலாளி கிட்ட கூட்டிட்டு போனேன்... அப்போ அந்த பொண்ணு வச்ச பேரு தான் சித்திரைச்செல்வி...

எப்பவும் வளமா இருக்கனும் வச்சாரு... அடுத்து ஒரு வருஷத்து அறிவு பிறந்தான்... அடுத்து நாங்க எதிர்ப்பார்க்காம பிறந்த பையன் உத்தமா‌...நாலு வருஷத்துல் அப்புறம் பொறந்தான்... இவன் பொறந்தப்போ என் முதலாளி உயிரோட இல்ல... உடம்பு முடியாம இறந்துட்டாரு...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя