உத்தமா என்ன என்று புரியாமல் யோசனையுடனும் பயந்துடனும் இருந்தான்...
உள்ளே சென்ற சாம்லி ஒரு paper உடன் வந்தாள்...
உத்தமா புரியாமல் விழிக்க...
சாம்லி : "இந்தா இத பிடி..."என்று ஒரு paper நீட்ட...
உத்தமா புருவம் முடிச்சிட்டு அவளை பார்க்க...
சாம்லி : என் வளைகாப்பு என்ன வாங்கனும் list எழுதி இருக்கேன்... Evening அவரு வந்ததும் அவரு கூட போய் வாங்கிட்டு வா...
உத்தமா அவளை முறைத்தவாறு "இத கொடுக்க தான்... என்னைய லியாவுக்கு தெரியாம வர சொன்னீயா... நா கூட என்னமோ ஏதோ னு பயந்துட்டேன்..."என்று சொல்ல...
சாம்லி : நா கூப்டது இதுக்கு இல்ல.... உன் கிட்ட வேற பேசனும்... இந்த list ஹ உன் கிட்ட கொடுக்கனும் னு எடுத்து வச்சேன்... மறந்துடுவேன் னு எடுத்து வந்து கொடுத்தேன்... இப்ப பேசலாமா...
உத்தமா : அதுக்கு தானே வந்தேன்... சொல்லு...
சாம்லி : லியா என்ன பண்றா...
உத்தமா : தூங்குறா...
சாம்லி : நா உன் கிட்ட ஒன்னு கேட்பேன்... நம் கோவப்பட கூடாது...
உத்தமா : நா வந்ததுல இருந்து இதே தான் சொல்ற... ஆனா என்ன னு சொல்ல மாட்ற... என்ன னு சொன்னா தானே தெரியும்...
சாம்லி : நீ கல்யாணம் ஆன புதுசு ல நல்லா தானே இருந்த... ஆனா இப்ப ஏன் இப்படி மாறிட்ட...
உத்தமா : புரியல...
சாம்லி : தப்பா நினைக்காத... உன் பெரிய அண்ணி வசந்தா உன் கிட்ட எதுவும் பேசுனாங்களா...
உத்தமா திருதிருவென முழிக்க...
சாம்லி : பேசு உத்தமா...
உத்தமா : இப்ப நல்லா தானே இருக்கேன்... எதுக்கு தேவை இல்லாம இப்ப பேசிக்கிட்டு... விடு கா...
சாம்லி : புரியுது உத்தமா... இப்படி பேசுனதுல இருந்தே உனக்கும் அவங்களும் ஏதோ நடந்து இருக்கு... எனக்கு அது பத்தி தேவை இல்ல... ஆனா அவங்க அப்படி சொன்னாங்க இவங்க இப்படி சொன்னாங்க னு எதுவும் நீ கேட்காத... உன் மனசுக்கு என்ன தோணுதோ அத பண்ணு... அடுத்தவங்க சொல்றத கேட்டு உன் வாழ்க்கையே நீயே கெடுத்துக்காத...

أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???