84

47 3 0
                                    

வலியுடன் நான் (நீ)-84

உத்தமா சுந்தர் அடிக்க கை ஓங்க...

ஜெரோம் அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டான்...

உத்தமா : ஏ... என்ன டா நினைச்சுக்கிட்டு இருக்க நீ... என் வாழ்க்கையையே அழிச்சிட்டீயே டா...

ஜெரோம் : உத்தமா பேசாம போயிடு... தேவை இல்லாத பேச்சு பேசாத...

உத்தமா : எது டா தேவை இல்லாத பேச்சு... நண்பனை விட்டுட்டு துரோகிக்கு support பண்ற...உன்னையே என் நண்பன் னு சொல்ல அசிங்கமா இருக்கு...

ஜெரோம் : எனக்கு தான் டா அசிங்கமா இருக்கு...உத்தமா வேணாம்... ரொம்ப நேரம் நா பேசாம இருக்க மாட்டேன்... உன் மேல அத்தனை பேரும் கோவத்துல இருக்காங்க... எல்லாருமே லியாவுக்காக மட்டும் தான் அமைதியா இருக்காங்க... உன்னைய பிச்சு எறிஞ்சுடுவாங்க... ஞாபகம் வச்சுக்கோ...

உத்தமா : என்ன டா ஆளாளுக்கு அவ பேரையே சொல்லிட்டு இருக்கீங்க...

ஜெரோம் : போடா டேய்... உன் வேலை என்னவோ அத மட்டும் பாரு... உன்னைய யாரு வர சொன்னா...

உத்தமா : என் வாழ்க்கைய கெடுத்துட்டு இவன் சந்தோஷமா அதுவும் என் நண்பனோட சிரிச்சு பேச்சிட்டு இருப்பான்.. நா பாத்துட்டு பேசாம போகனுமா..,

சுந்தர் : உத்தமா உனக்கு அவ்ளோ தான் மரியாதை... தேவை இல்லாம உன் வாழ்க்கைய நா தான் கெடுத்தேன் னு என் மேல பழி போடாத... நா பேசாம இருக்க மாட்டேன்.... என் மேல ஒரு தப்பு‌ இருக்கு... அதனால் நா பேசாம இருக்கேன்...

உத்தமா : "என்ன டா மயிரு..."என்று எகிறி கொண்டு வர...

இருவருக்கும் இடையில் வண்டியில் வந்து நின்றான் ஹெரால்டு...

ஹெரால்டு உத்தமா வை எரிப்பது போல் பார்க்க...

உத்தமா அனைவரையும் முறைத்து விட்டு " இன்னக்கி தப்பிச்சுட்ட... உனக்கு இருக்கு டா..."என்று கத்தி கொண்டு தன் வண்டியை உயிர்ப்பித்து வேகமெடுத்து சென்றான்...

அவன் சென்றதும் ஹெரால்டு சுந்தரை பார்த்து " அவன் எதுக்கு வந்தான்..."என்று கேட்க...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now