தன் வாழ்க்கையில் ஆசைப்பட்டனுடன் சேர்வதற்காக பெற்றோரை எதிர்த்து அவனை கரம் பிடித்தாள்...
ஆனால் அவளின் கிரகம் எந்த நேரத்தில் அவனை கரம் பிடித்தாளோ அவனும் சந்தோஷமா வாழ்ந்த நாட்களை விட அழுத நாட்கள் தான் அதிகம்...
எத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கு... ஆனா உத்தமா மட்டும் மாறவே இல்லை...
அவனின் சந்தேகம் என்ற நோய் தீவிரம் அடைந்து விட்டது...
அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு லியா உத்தமா வை பார்ப்பதையே தவிர்த்தாள்...
உத்தமா லியா வீட்டு வாசலில் நின்று தன்னோடு வருமாறு கெஞ்சி அழுது கத்தி பார்த்தான்...
அவள் தன் அறையை விட்டு வெளியே வர மாட்டாள்...
தன் உடன் பிறந்த சகோதரரான நினைத்த ஒருவனுடன் சேர்த்து வைத்து பேசி அவனே தன் உயிரை மாய்த்து கொள்ள முயற்சி செய்யும் அளவிற்க்கு அவனின் வார்த்தையின் வெளிப்பாடு கொடுரமாகி விட்டது...
மருத்துவமனை இருந்த ஜெரோம் குணமாகி வீட்டிற்கு வந்தான்...
லியா அவன் கன்னத்தில் அறைந்து கட்டி கொண்டு அழுதாள்...
லியா : ஏன் ஜெரோ இப்படி பண்ண... அவன் சொன்னா அது உண்மையாகிடுமா... அவன் என்னை ரோட்டுல போறவன் வர்றவன் கூட எல்லாம் சேர்த்து வச்சு என்னை பேசி இருக்கான்... அது எல்லாம் பார்த்தா நா எத்தனையோ தடவ கைய அறுத்துக்கனும்... அவன் இப்படி தான் னு நினைக்கிட்டு அவனை கண்டுக்கவே மாட்டேன்... புதுசா யாராவது வீட்டை தாண்டி ஒரு பையன் போனா கூட... இது யாரும் டி புதுசா இருக்கு...
அவன் எதுக்கு இந்த பக்கம் போறான்... யாரு வீட்டுக்கு போறான்... அவன நீ பாத்து இருக்கீயா... இல்ல உன்னையே எங்கேயோவது பாத்து இருக்கானா... ஒரு வேளை நீ medical ல வேலை பாக்கும் போது medicine எதுவும் வாங்க வந்தவனா.... உன்னையே பாத்துட்டு இந்த பக்கம் வந்தானா னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பான்...நா நிக்கிற இடத்துல இருந்து என்னைய பாக்குற தூரத்துல எந்த பசங்களாவது இருந்தா அவ்ளோ தான்...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???