4

161 5 0
                                    

ஹெரால்டு ஜெரோம்க்கு call செய்து சலித்து போய் "மாமா அவன் எடுக்க மாட்றான்... நல்லா தூங்கிட்டானோ என்னவோ... இந்த நேரத்துல வீட்டுக்கூ போக யோசனையாக தான் இருக்கு இருந்தாலும் வேற வழி இல்ல நம்ம போய் பாக்கலாம்..."என்று சொல்ல...

வில்லியம் : மச்சான் ஊரு மட்டும் தான் தெரியும்... வீடு தெரியாது... எப்படி போய் பாக்குறது...

ஹெரால்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்...

வில்லியம் : அங்க போனாலும் பிரயோஜனம் இல்லை னு நினைக்கிறேன்...

ஹெரால்டு : ஏன் அப்படி சொல்றீங்க...

வில்லியம் : லியா வீட்டை விட்டு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகி இருக்கும்... லியா அந்த பையனை தேடி போயி இருந்தா கண்டிப்பா அந்த பையனும் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கனும்... அங்க இருக்க வாய்ப்பே இல்ல...

ஹெரால்டு : U r correct... இப்ப என்ன பண்ணலாம்...

வில்லியம் : அது தான் எனக்கும் புரியல... ஆனா இப்ப எப்படி பார்த்தாலும் இருக்குற ஒரே வழி ஜெரோம் தான்...

அந்த வழியே யோசனையுடன் வந்து கொண்டு இருந்த ஜெரோம் இதை கேட்க...

அதிர்ச்சியில் மறைந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்...

ஹெரால்டு : ஜெரோம் ஹ...

வில்லியம் : ஆமா... உனக்கும் அந்த பையனுக்கும் லியாவுக்கும் பொதுவா இருக்குறது ஜெரோம் மட்டும் தான்... நம்ம இப்ப அந்த பையனையும் லியாவையும் கண்டு பிடிக்கனும் னா ஜெரோம் வச்சு தான் பிடிக்க முடியும்...

ஹெரால்டு : அவனுக்கு தான் நம்ம‌ call பண்ணிட்டே இருக்கோம்... ஆனா எடுக்க மாட்றானே...

வில்லியம் : அதுக்காக அப்படியே விட முடியுமா... வே‌ற வழி இல்ல... ஜெரோம் வீட்டு கதவை தட்ட வேண்டியது தான்...

இதை கேட்டு கொண்டு இருந்த ஜெரோம் "அய்யய்யோ..."என்று பதறி போய் "என்ன நம்ம கிட்ட வராங்க...மாட்டுன டா... இதுக்கு நீயும் ஒரு காரணம் னு அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் நீ காலி...முத இங்க இருந்து ஓடு டா ஜெரோ..."என்று அங்கே இருந்து அவர்களுக்கு தெரியாமல் வீட்டை நோக்கி ஓடினான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now