25

125 3 0
                                        

உத்தமா கட்டிலில் அமர்ந்து தலையை இறுக்கமாக பிடித்து கொண்டு இருந்தான்...

லியா தரையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள்...

உத்தமா நிமிர்ந்து அவளை பார்த்து கொண்டே இருந்தான்...

உத்தமா : "லியா..."என்று கூப்பிட...

லியா விழியை மட்டும் உயர்த்தி அவனை பார்க்க...

அவள் கண்ணில் கோவம் தெரிய... உத்தமா தலையை ஆட்டி கொண்டு குனிந்து கொண்டான்...

உத்தமா மறுபடியும் அவளே கூப்பிட வாயை திறக்க வந்து வாயை மூடி கொண்டான்...

இப்படியே நான்கு ஐந்து முறை அவளை பார்ப்பதும் பேசாமல் திரும்பி கொள்வதுமாக இருந்தான்...

சிறிது நேரம் கழித்து மெதுவாக " லியா..." என்று அழைக்க...

அவள் நிமிர்ந்து பார்த்தாள்...

உத்தமா : தலை வலிக்குது மா... Coffee கிடைக்குமா...

லியா பேசாமல் எழுந்து நகர...எதிரே சாம்லி வந்தாள்...

சாம்லி : எங்க டி...

லியா : தலை வலிக்கிதாம்... Coffee வேணுமாம்...

சாம்லி லியா முதுகு பின்னால் எட்டி பார்க்க...

உத்தமா தலையை பிடித்தவாறு சாம்லி மை பார்த்து விட்டு தலை குனிந்து கொள்ள...

சாம்லி : அவன் கிடக்குறான்... நீ வா time ஆச்சு... சாப்டலாம்...

லியா : "அது வந்து சாம்..."என்று உத்தமா வை பார்க்க...

சாம்லி : சரக்கு அடிக்கும் போது மட்டும் நல்லா இருந்துச்சா...

உத்தமா வேகமாக நிமிர்ந்து பார்த்தான்...

சாம்லி : என்ன டா..

உத்தமா வேகமாக "ஒன்னும் இல்ல..."என்று தலையை ஆட்டினான்...

சாம்லி : "உன்னைய‌ பாத்தா எனக்கு கோவமா வருது... இவளுக்காக நா அமைதியா இருக்கேன்... இல்ல..."என்று பல்லை கடிக்க...

உத்தமா :"இப்படி கோவப்படுற அளவுக்கு நா என்ன பண்ணேன்..."என்று யோசித்தான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt