பாரதி லியா கேட்டதுக்கு பேசாமல் அவளை கடந்து உள் அறைக்கு சென்று அமர்ந்து கொள்ள...
சாம்லி அவளை பார்த்து விட்டு சாப்டுவதை தொடர...
லியா : சாம் வா.. என்ன னு கேளு...
சாம்லி : "நா என்னத்த கேட்குறது... சொல்றதா இருந்தா அவளே சொல்லி இருப்பா..."என்று இட்லியை சட்னியில் தொய்த்து வாயில் வைக்க..
லியா : இப்ப உனக்கு சாப்பாடு தான் முக்கியம் மா... வா சாம்...
சாம்லி : Hello நமக்கு சோறு தான் முக்கியம் சங்கத்தை சேர்ந்தவ... பூகம்பமே வந்தாலும் எனக்கு சோறு தான் முக்கியம்...
லியா : "அட வா சாம்..."என்று அவளை கையை பிடித்து இழுக்க...
இட்லியை பிய்த்து வாய் அருகே கொண்டு சென்றவள் அவள் இழுத்ததில் கீழே விழ... அவளை முறைத்தாள் சாம்லி...
லியா : அச்சோ அப்புறம் முறைக்கலாம் வா சாம்...
சாம்லி தட்டை தூக்கி கொண்டே அவளுடன் சென்றாள்...
பாரதி படுத்து இருக்க...
லியா சாம்லி தோளை சொரிய...
சாம்லி சாப்டு கொண்டே "பாரதி மாடிக்கு போன வந்த என்ன நடந்துச்சு..."என்று கேட்க..
பாரதி : ஒன்னும் இல்ல யா..,
சாம்லி : "ஓ...சரி..."என்று லியா வை பார்த்து "அடியேய் லியா ஒன்னும் இல்லையா... வா போலாம்..."என்று நகர...
லியா அவளை இழுத்து "அச்சோ சாம் கேளு..."என்று சொல்ல...
சாம்லி : "நீ கேளேன்..."என்று பாரதி யை பார்த்து " இப்ப நீ சொல்ல போறீயா இல்ல பாரதி..."என்று கேட்க...
பாரதி : அது தான் ஒன்னு இல்ல னு சொல்றேன் ல...
சாம்லி : அட போங்க டி...
லியா : அக்கா என்ன னு சொல்லுங்க கா...
பாரதி : ஒன்னும் இல்ல நா மாடிக்கு போனேன்...
சாம்லி : ஆமா... அதுக்கு அப்புறம் தான் நடந்துச்சு னு நாங்க கேட்குறோம்...
பாரதி : நா மாடி ல போய் ல போய் பாக்கும் போது உத்தமா படுத்து இருந்தான்... என்னைய பாத்ததும் வேகமாக எழுந்து நின்றான்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???