ஜோனாவும் அறிவும் பாரதியை scaning room அழைத்து செல்ல...
ஜெரோம் அங்கே அமர்ந்து கால் ஆட்டி கொண்டு இருக்க...
ஜோனா அவனை முறைத்து கொண்டே அறிவை பார்த்து "Sir... அவரு உங்க கூட வந்த ஆளு தானே... இங்க என்ன பண்றாரு... அனாவசியமா யாரும் scaning room க்கு வர கூடாது... வெளிய போக சொல்லுங்க..."என்று சொல்ல...
ஜெரோம் : பார்ரா... அப்புறம் வேற...
அறிவு : டேய் நீ போ டா... அங்க room ல லியாவும் சாம்லியும் தனியா இருக்காங்க... அவங்க கூட இரு... நாங்க வந்துடுறோம்...
ஜெரோம் : "அவங்க room ல தானே இருக்காங்க... இருக்கட்டும்... நா வேணும்னா உங்க help க்கு இருக்கேனே..."என்று ஜோனா வை பார்த்து கொண்டே சொல்ல...
அறிவு : நீ ஆணியே புடுங்க வேணாம்... கிளம்பு...
ஜெரோம் முகத்தை சோகமாக வைத்து கொண்டு நகர்ந்தான்...
கதவை திறந்து வந்து ஜெரோம் சோகமாக வந்த அமர...
லியாவும் சாம்லியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜெரோமை பார்த்தனர்...
லியா : ஜெரோம் அண்ணா... What happen...
ஜெரோம் : "அவ ரொம்ப பண்றா..."என்று சத்தமாக சொல்ல...
இருவரும் பயந்தனர்...
சாம்லி : டேய் தடி மாடு... எதுக்கு டா கத்துற...
ஜெரோம் : பின்ன என்ன அக்கா... வந்தது ல இருந்து அவ பின்னாடியே தான் சுத்திக்கிட்டு இருக்கேன்... கண்டுக்கவே இல்ல...நா எவ்ளோ தான் பொறுமையா இருக்குறது...
லியா : நீ பண்ணதும் மட்டும் சரியா... அஞ்சு வருசம் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா... போய் பாரு னு நா எவ்ளோ சொன்னேன்... கேட்டியா... இப்ப பாரு... அவ எவ்ளோ கோவமா இருக்கா னு தெரியுமா... நீ பண்ணதுக்கு அவ முத பேசி இருக்கவே கூடாது... உன் கூட கோவமா பேசவாது செய்றாளே சந்தோஷப்பட்டுக்கோ...
ஜெரோம் : அவ படிப்பு கெட வேணாமே தானே அப்படி பண்ணேன்... நா போய் அவளை பாக்க... அது அவ அப்பாக்கு தெரிய... அவ அப்பா அவ கிட்ட சண்டை போடுவாரு... எதுக்கு வம்பு னு தான் நா பாக்க போகல... இருந்தாலும் நா அவளுக்கு எத்தனை calls எத்தனை messages எல்லாம் பண்ணி இருப்பேன்... Calls க்கு No response... Message க்கு no reply எனக்கு எப்படி இருக்கும்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
