ஜெரோம் கையை பிசைந்து கொண்டு நிற்க...
பாரதி அழுது கொண்டு இருக்க...
சாம்லி அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்...
அறிவு எட்வின் நல்லா பதற்றதுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தனர்...
வசந்தா எந்த விதம் உணர்ச்சியும் காட்டாமல் நின்றாள்...
சற்று தொலைவில் லியா நடக்க முடியாமல் அழுதவாறு ஹெரால்டு உடன் வர... ஹெரால்டு அவளை தன்னோடு அணைத்தவாறு அழைத்து வந்தான்...
லியா நேராக ஜெரோம் அருகில் சென்றாள்...
லியா : என்ன ஆச்சு அண்ணா...
ஜெரோம் : எறும்பு மருந்தை சாப்டுட்டான்...
லியா கதறி அழ...
ஜெரோம் : அழாத லியா... நல்ல வேலை நா சரியான நேரத்துல போனேன்... நா போனப்போ தான் சாப்டு இருக்கான்... அதுவும் சரக்கோட சேர்ந்து குடிச்சு இருக்கான்... இதுல கதவை வேற பூட்டி இருந்தான்...
ஹெரால்டு : அப்புறம் எப்படி காப்பாத்துனீங்க..
எட்வின் : கதவை உடைச்சு தான்... ஜெரோம் தான் கடப்பாரை ஹ எடுத்துட்டு போய் உடைச்சு திறந்தான்... உள்ள போய் பார்த்தா சரக்கு bottle glass எறும்பு மருந்து இருந்துச்சு... Glass பாதி குடிச்சு இருந்த சரக்கு இருந்துச்சு... எறும்பு மருந்து கால்வாசி இல்ல... Sockpeas நுனுக்கி சரக்குல mix பண்ணி குடிச்சு இருக்கான்...
குடிக்கார பய... யாரும் disturb பண்ண வேணாம் னு சொல்லவும் தான்... நாங்க யாரும் அவனை பாக்க போகல...அப்பவும் ரொம்ப நேரமா வரல னு தான் நாங்க போனா கோவப்படுவான் னு தான் நாங்க ஜெரோம்க்கு call பண்ணி வர சொன்னோம்... நாங்க அப்படி யோசிக்கமா இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும் னு நினைச்சு கூட பாக்க முடியால...
லியா அழதவாறு ஹெரால்டு பிடியில் இருந்து விலகி பாரதி அருகில் சென்றாள்...
லியா : அக்கா....
பாரதி தன்னோடு அணைத்து கொண்டாள்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???