65

64 2 0
                                    

அன்று மாலை...

உத்தமா வேலை முடிந்து வருவது போல் வண்டியை வேகமாக வந்து நிறுத்தினான்...

மாடிக்கு ரெண்டு படியாக தாவி சென்று பார்க்க...

லியா அங்கே இல்ல...கீழே இறங்கி வந்து வீட்டு வாசலில் நின்று உள்ளே எட்டி பார்க்க...

சமையல் அறையில் வேலை செய்யும் சத்தம் கேட்க...உள்ளே சென்று பார்த்தான்...

பாரதி பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தாள்...

உத்தமா : அண்ணி லியா எங்க...

பாரதி திரும்பி பார்த்து "சாம்லி வீட்டுல இருக்கா..."என்று சொல்லி தன் வேலையை தொடர...

உத்தமா சாம்லி வீட்டிற்கு சென்றான்...

உத்தமா : லியா...

சாம்லி வந்து பார்த்து " நீயா... உள்ள வா டா..."என்று சொல்ல...

உத்தமா உள்ளே வந்து லியா பார்த்து "வீட்டுக்கு வா..."என்று மறு நொடி வெளியேறி விட்டான்...

சாம்லி மூக்கை பொத்தி கொண்டு "சரக்கு அடிச்சு இருக்கானா... வாடை தாங்கல..."என்று கேட்க..

லியா : என்ன சாம் இது...

சாம்லி : நீ போ... என்ன பண்றான் னு பாக்கலாம்... நா பாரதி கிட்ட சொல்லி கூட்டிட்டு வரேன்...

லியா என்ன நடக்க போகுதோ என்ற பயத்துடன் சென்றாள்...

உத்தமா அவளின் வருகைக்காக காத்து கொண்டு இருக்க...

லியா வந்ததும் "என்ன நினைச்சுட்டு இருக்க நீ... நா இல்லைனா ஆட்டம் போடுறீயா... வீட்டுல இருக்க மாட்டா..."என்று கேட்க...

லியா பெருமூச்சு விட்டு "யோவ் சாம் வீட்டுக்கு தானே போனேன்... வேற எங்க போனேன்..."என்று கேட்க...

உத்தமா : ரோட்டுல உனக்கு என்ன வேலை... அதுவும் நீ ரோட்டுக்கு வந்த நேரம் அந்த சுந்தரும் அந்த பக்கம் வந்து இருக்கான்... என்ன டி என்ன நடக்குது...

அப்போது தான் லியாவுக்கு ஞாபகம் வந்தது...

அவளும் சாம்லியும் பேசி கொண்டு இருக்கும் போது சுந்தர் அவர்களை கடந்து சென்றான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now