இன்று...
எட்வின் சாம்லினா மகனின் பெயர் சூட்டும் விழா...
இரண்டு நாட்களுக்கு முன்பே...
எட்வின் ஜெரோம் ஐ அழைத்து "இங்க பாரு டா என் மகனே ஞானப்பா..."என்று சொல்ல...
ஜெரோம் அதிர்ந்து போனான்...
ஜெரோம் : யோவ் மாமா... என்ன யா உலர்ற... உன் அண்ணே தம்பி தானே யா... ஞானப்பெற்றோர் னு தொடனும்... நா எப்படி யா... அதுவும் இல்லாம நா உன்னையே மாமா னு கூப்டுறேன்... எப்படி வரும்...
எட்வின் : தெரியும் டா...நீ ஏதோ பழக்கத்துக்கு மாமா னு கூப்டுற... அவ்ளோ தானே... நா உனக்கு மாமா முறையே இல்ல... எனக்கு கூட பொறந்த அண்ணே தம்பி னு யாரும் இல்ல... பங்காளி வீட்டு பயலுங்களும் ஒருத்தனும் சரி இல்ல... அவனுங்க என் மகனை தொட பிடிக்கல... சரி சாம்லி கூட பொறந்த அக்கா தங்கச்சி இருந்தாலும் தொட சொல்லலாம்... அதுவும் இல்ல... வீட்டுக்கு ஒத்த பொண்ணு... என் அம்மா என் ஒன்று விட்ட சித்தப்பா பையனை தொட சொல்றாங்க... எனக்கு அவனோட நடவடிக்கையே பிடிக்காது... பெத்த அப்பனை மதிக்கவே மாட்டான்... அம்மா வ அவ இவ னு மரியாதை இல்லாம தான் பேசுவான்...இப்படி இருக்கும் போது எப்படி நாளைக்கு எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனை நம்பி என் மகனை எப்படி கொடுக்கறது... நீ என்னைய மாமா னு கூப்டலாம்...ஆனா நா உன்னையே என் தம்பியா தான் நினைக்கிறேன்... ஒழுங்கா என் தம்பி யா வந்து என் மகனை தொடனும்... சரியா...
ஜெரோம் கண் கலங்கி நிற்க...
எட்வின் : டேய் இதுக்கு எல்லாம் யாராவது அழுகுவாங்களா...
ஜெரோம் : "போயா யோவ்... என் வாயில் நல்லா வருது... உன் மவனுக்கு நா எதாவது செய்யனும் ல... என் கல்யாணத்துக்கு வச்சு இருந்த பணத்துல ஒரு 50000 போச்சு யா...என் ஞானமகனுக்கு செயின் எடுக்கனும் ல... செலவு வச்சுட்டீயே யா..."என்று வராத கண்ணை துடைக்க...
எட்வின் சிரித்து கொண்டே அவனை தோளை தட்டி கொடுக்க...
ஜெரோம் : இப்படி ஒரு நல்ல காரியத்தை யாரு பாத்தா னு தெரியலையே...
أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???