"Hi hello வணக்கம் வந்தனம் நமஸ்தே இது சூரியன் FM 93.5 நான் உங்கள் RJ பல்லவி (கற்பனை ) எல்லாரும் எப்படி இருக்கீங்க... நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்... வழக்கமா நா உங்களுக்கு trend ல இருக்குற news ஹ சொல்லுவேன்... இன்னக்கி உங்களுக்கு கொண்டு வந்து இருக்குற trending news என்ன னு தெரியுமா... இந்த news உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்... இது மாதிரி யாரும் இருக்காதீங்க... இருக்கவும் கூடாது னு தான் நா உங்களுக்கு கொண்டு வந்து இருக்கேன்... அதிக வட்டிக்கு பணம் வாங்கி வட்டியையும் கட்ட முடியாம அசலையும் கொடுக்க முடியாம தவிச்சு ரொம்ப கஷ்டப்படுற ஒரு குடும்பம்... கடன் கொடுத்தவன் வீடு தேடி வந்து அவங்க மானம் போகுற மாதிரி அசிங்கமா பேசி வார்த்தையால கொன்னுட்டாங்க... அவமானம் தாங்காம அந்த குடும்பமே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க... எவ்ளோ வருத்தமான விசயம்..." என்று FM radio வில் ஒலித்து கொண்டு இருக்க...
கட்டிலில் படுத்திருந்த உத்தமா அதை கேட்டு வேகமாக எழுந்து அமர... அவன் முகம் முழுவதும் வியர்வை வழிந்தது...
வியர்வையை வழித்து விட்டு ஒரு பயத்துடன் மூச்சு வாங்க அமர்ந்திருந்தான்...
லியா அவனையே பார்த்தாள்...
உத்தமா அவளை பார்ப்பதை அறிந்து முறைத்து "என்ன... எதுக்கு அப்படி பாக்குற..."என்று கடுமையாக கேட்க
லியா : வேலைக்கு போகலையா..
உத்தமா சற்றா தயங்கியவாறு "நா நா அது வந்து வேலைக்கு போக... ஹான் load இல்ல... வந்தா call பண்றேன் னு சொல்லி இருக்காங்க..."என்று எங்கேயோ பார்த்தவாறு சொல்ல...
லியா புருவம் முடிச்சிட்டு பார்த்து கீழே சென்றாள்...
லியா கீழே இறங்கி வர..
ஜெரோம் வேகமாக கீழே பார்த்தவாறு படி ஏறி வர... லியா மேல் மோதுவது போல் வர...லியா அவனை பார்த்து "ஏய்..."என்று கத்த...
ஜெரோம் அப்படியே நின்று அவளை பார்த்து "என்ன.. எதுக்கு கத்துற..."என்று கேட்க...
லியா : நா கீழ இறங்கி வரேன்... நீ பாக்காம வேகமாக வர... என் மேல மோதி கீழ விழுந்தா என்ன ஆகுறது...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???