மலர்மணி : ஹெரால் நீ தான் லியா காதலிக்கிற னு வந்து சொல்லி கோவப்பட்ட... இப்ப நீயே இப்படி சொல்றீயே பா...
ஹெரால்டு : "ஆமா நா தான் சொன்னேன்... காதலிக்கிறது தப்பு இல்ல மா... என்ன வேற மதத்தில் ஒரு பையனை காதலிச்சுட்டா... அவ்ளோ தான்... என்னைய பொறுத்த வரைக்கும் எந்த மதம் எந்த ஜாதி இது முக்கியம் இல்ல...
கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா வச்சு பாத்துக்குவானா அது தான் முக்கியம்... அவ காதல் விசயம் தெரிஞ்சதும் நா உங்க கிட்ட வந்து சொன்னதுக்கு என்ன காரணம்...அவளுக்கு நல்லப்படியா கல்யாணம் பண்ணி வைப்பீங்க னு நினைச்சு தான்...
நா கோவப்பட்டதுக்கு காரணம்... முத உங்க கிட்ட சொல்லும் போது நா கோவமா இருந்தா நீங்க என்னைய calm பண்ணுவீங்க னு தான்... ஆனா நா கோவப்படும் போது பேசாம இருந்துட்டு இப்படி பண்ணுவீங்க னு நா நினைச்சு கூட பாக்கல...
கல்யாணம் ஆகிருச்சு னு தெரிஞ்சதும் அப்படியே விடாம police complaint ஏன் கொடுத்தீங்க...
நீங்க நினைக்கலாம்... இவ்ளோ பேசுற நீ ஏன் அன்னக்கி அவ வந்ததும் அவ கிட்ட சண்டை போட்ட னு நீங்க அவ கிட்ட கோவப்பட கூடாது னு தான் அப்படி பண்ணேன்...
ஆனா இப்படி பண்ணிட்டீங்க...
உங்க கிட்ட விசயத்தை சொன்னதுக்கு காரணம் என்ன னு தெரியுமா... நீங்க அந்த பையனை பத்தி விசாரிப்பீங்க... அவ நல்ல பையனா எப்படி அவனோட குடும்பம் எப்படி னு விசாரிப்பீங்க னு நினைச்சு தான்...
அதே நேரம் லியா இப்படி பண்ணுவா னு நா கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல... நா திட்டுனதை நினைச்சு அவ இப்படி ஒரு முடிவு எடுத்துட்டா...அவ காதலிச்சுட்டா... காதலிக்கும் போது யாரா இருந்தாலும் நல்லவனா தான் தெரியும்...
ஆனா அப்புறம் போக போக அவனோட உண்மையான குணம் தெரியும்... அதுக்காக அவனோட ஊருல அவனோட வீட்டை சுத்தி இருக்குறவங்களுக்கு அவன் எப்படி பேசுவான்... எப்படி நடந்துக்குவான்... எப்படிப்பட்ட குணம் னு கொஞ்சமாவது தெரிய வாய்ப்பு இருக்கு...
இப்போ இந்த நிமிசம் அவளை காப்பாத்த அவ மேல கோவம் பட்டது தப்போ னு யோசிக்க தோணுது... அவளா அமைச்சுக்கிட்ட வாழ்க்கை இது... அவ நல்லா இருந்தா சந்தோஷம்... ஆனா நல்லா அமையலனா...
ВЫ ЧИТАЕТЕ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Художественная прозаஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
