3

328 5 0
                                    

வலியுடன் நான் (நீ)
பாகம் 3

அவனின் வருகைக்காக காத்தி கொண்டு இருந்தாள் லியா என்ற லியானா கண்களில் கண்ணீர் வழக்கமாக அவனுக்காக காத்திருக்கும் இடத்தில் அவன் அவன் வருகைக்காக காத்திருந்தாள்...

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள்... வீட்டிற்கு கடைசி பெண்... ரெண்டு அக்கா ஒரு அண்ணனுக்கு தங்கையாக பிறந்தவள்...  பொதுவாக கடைசி பிள்ளைகளாய் பிறந்தவர்கள் செல்லமாக தான் வளர்க்கப்படுவார்கள் இங்கேயும் அதே தான் கடைசி பிறந்த என்பதால் மிகவும் செல்லம் அவள்‌ அண்ணனுக்கு அக்காக்களை விட தங்கையை தான் பிடிக்கும் ஆனால் வெளிப்படுவது இல்லை...Medical shop ல் வேலை பார்க்கிறாள்... அவள் காதலிக்கு இந்து  மதத்தை சார்ந்தவன் ஜெரோமின் நெருங்கிய தோழன்...

தன் வீட்டின் அருகில் இருக்கும் அவள் அண்ணன் ஹெரால்டு தோழன் ஜெரோம் டேவிட்... ஹெரால்டு பக்கத்து வீட்டு தோழன் உத்தமா பள்ளி தோழன் ஜெரோம் இருவருக்கு பொதுவான தோழன் ஆனால் உத்தமாவும் ஹெரால்டும் பார்த்து இருக்கிறார்களே தவிர பேசி கொண்டது இல்லை அப்படி தான் ஒரு நாள் லியா தன் தோழியுடன் வெளியே சாப்பிட செல்ல... ஜெரோம் ஐ Hotel லில் பார்த்தாள்... அவனுடன் உத்தமச்செல்வன் இருந்தான்‌‌...

நால்வரும் ஒன்றாக சாப்பிட்டனர்... பின் வந்த நாளில் இருவரும் எதார்த்தமாகவும் பேசி வைத்து கொண்டு அடிக்கடி பார்க்க தொடங்கினர் அதுவே இருவரையும் நெருக்கம் ஆகியது இருவரும் பேசி பழகி நண்பர்கள் ஆகி பின் நாளடைவில் காதலர்களாக மாறினர்...

உத்தமா லியா வை பார்க்க அடிக்கடி medical shop க்கு சென்று வந்தான் அதிகமாக இருவரும் வெளியே சந்தித்து கொண்டனர் உத்தமா ஒரு நாள் லியாவை காதலிப்பதை ஜெரோமிடம் சொல்ல அவன் உத்தமா அண்ணி பாரதியிடம் சொன்னான் இருவரை தவிர வேற யாருக்கும் தெரியாமல் இருந்தது இந்த நிலையில் தான் இன்று மாலையில் லியா உத்தமாவுடன் பேசி கொண்டு இருந்ததை பார்த்தான் ஹெரால்டு...

வீட்டில் வந்து தன் தந்தையிடம் லியா ஒருவனை காதலிப்பதாக கூற... ஆசிர்வாதம் கோவமாகி "அவளை உடனே இழுத்துட்டு வா  ஆளாளுக்கு என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அவ நா பாக்குற மாப்பிளைய தான் கல்யாணம் பண்ணனும் அவன் ஒரு குடிக்காரனாவே இருந்தாலும்  பரவா இல்ல ஆனா இனி இந்த வீட்டுல காதல் கல்யாணம் நடக்க கூடாது வரட்டும் அவளுக்கு இருக்கு..."என ஆக்ரோசமாய் கத்து சென்றார்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now