வலியுடன் நான் (நீ)
பாகம் 7மறு நாள்...
லியா எழுந்து வெளியே வந்திள்
வீட்டின் முன் சிலர் கூட நின்றனர்...
பாரதியும் உத்தமாவும் அவர்களுடன் பேசி கொண்டு இருக்க லியாவை பாத்த பாரதி "வா மா... இவங்க எல்லாம் உன்னைய தான் பாக்க வந்து இருக்காங்க..."
லியா :"என்னையா..." என்று புரியாமல் விழித்தவாறு உத்தமா அருகில் வந்து நின்றாள்...
உத்தமா : நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ல அது தான் பாக்க வந்து இருக்காங்க எல்லாரும் இந்த ஊரு ஆளுங்க தான்
கூட்டத்தில் ஒருத்தி " உன் பேரு என்ன மா..."என்று கேட்க...
"லியானா ஆசிர்வாதம்..."
ஒருவன் : இயேசு மாதா வ கும்புடுவீங்களா... எப்படி மா எங்க பையன காதலிச்ச...
"ஏன் காதலிக்க கூடாதா..." என்று சத்தம் வர...
அனைவரும் திரும்பி பார்க்க...
கூட்டத்தை விலக்கி கொண்டு ஒருத்தி முன்னால் வந்தாள்...
லியா முன் கை நீட்டி "Hi I'm சாம்லினா... பின்னாடி வீட்டுல தான் இருக்கேன்... இவங்க பாணி ல சொல்லனும் னா நானும் உங்க ஆளுங்க தான்..."என்று புன்னகையுடன் சொல்ல..
ஏனோ சாம்லினாவை லியாவிற்கு பிடித்து விட கை குலுக்கினாள்...
சாம்லி : என்ன உத்தமா சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட... என் கிட்ட கூட சொல்லவே இல்ல பாத்தீயா...
உத்தமா தலை குனிந்து சிரித்தான்...
"அவர் தான் பெரிய ஆளா ஆகிட்டாரு... நம்ம கிட்ட எப்படி சொல்லுவாரு..."என்று கேட்டு கொண்டே சாம்லினா வின் கணவன் எட்வின் அங்கே வந்தான்...
சாம்லி : நா உன்னையே லியா னு கூப்டலாமா...
லியா : தாராளமா உங்களுக்கு எப்படி தோணுதோ கூப்டுங்க
சாம்லி : He's my husband எட்வின் டானிஷ்...
எட்வின் : பாக்கல நல்லா பொண்ணா இருக்க... இந்த பையல போய் கல்யாணம் பண்ணி இருக்கீயே மா உன்ன நினைச்சா பாவமா இருக்கும்

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???