உத்தமா போதையில் தரையில் படுத்து கிடக்க... லியா அவனை பார்த்து கட்டிலில் படுத்தாள்...
லியா அயர்ந்து தூங்க...உத்தமா அவளை எழுப்பினான்...
லியா மெதுவாக கண் திறந்து பார்க்க...
உத்தமா அவள் அருகில் அமர்ந்திருந்தான்...
லியா பயந்து போய் எழ...
உத்தமா : நா தான் டி...
லியா அவனை உற்று பார்க்க... போதை தெளிந்து இருந்தான்...
லியா மணியை பார்க்க...
நடு ராத்திரி 1.25
லியா : யோவ் என்ன யா பிரச்சனை... இப்படி நட்டநடு ராத்திரி ல வந்து எழுப்புற...
உத்தமா : அது பசிக்கிது டி... Night சாப்டாம படுத்துட்டேனா... இப்ப பசிக்கிது... சாப்ட ஏதாவது இருந்தா கொடு டி...
லியா : "போதை ல வந்து படுத்துட்டு இப்ப பசிக்கிதாம்..."என்று முனுமுனுக்க...
உத்தமா : என்ன டி...
லியா : அது வந்து சாப்பாடு இல்லையே யா...
உத்தமா : என்னது சாப்பாடு இல்லையா...ஏன் டி நா தான் சாப்டல னு தெரியுமே... சேர்த்து தானே சமைச்ச...
லியா : ஆமா யா... நீ வீட்டுக்கு வந்ததும் மாடிக்கு தள்ளாடிக்கிட்டே போன அப்பவே தெரிஞ்சுடுருச்சு... நீ சரக்கு ல இருக்க னு அது தான்... நீ சாப்ட மாட்ட னு தண்ணி ஊத்தி வச்சுட்டேன்...
உத்தமா அவளை முறைக்க...
லியா : "சரி முறைக்காத... சாம் கிட்ட மாவு இருக்கு... நா போய் வாங்கிட்டு வந்து தோசை ஊத்தி தரேன்..."என்று mobile எடுத்து கொண்டு கீழே சென்றாள்...
உத்தமாவும் அவள் பின்னாடியே வர...
லியா சாம் வீட்டு முன் நின்று call செய்தாள்...
கதவை திறக்கப்பட...
தூக்கம் தெளியாமல் கண் சொருகிய நிலையில் கதவில் சாய்ந்து சாம்லி நின்றாள்...
லியா : சாம்...
சாம்லி : உள்ள வந்து எடுத்துக்கோ...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???