59

64 3 0
                                    

முத்துராமன் அறிவு இடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டு உத்தமா வை பார்த்தார்...

உத்தமா அவரை பார்த்ததும் தலை குனிந்து கொண்டான்...

முத்துராமன் : அம்மாடி லியா...

லியா வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு அவர் அருகில் வந்து நின்றாள்...

முத்துராமன் உத்தமா வை பார்த்து கொண்டே லியாவிடம் "அம்மாடி இதுல ஒரு லட்சம் இருக்கு மா... உத்தமா வ நம்பி நா கொடுக்க மாட்டேன்... இந்த பணத்தை நா உன் கிட்ட கொடுக்குறேன் மா‌.. யார் யாருக்கு எவ்ளோ பணம் கொடுக்கனும் னு பாத்து நீயே உன் கையால கொடு...இவன் கொடுக்குறேன் சொன்னா இவன் கையில் பணத்தை கொடுக்காத... யாரா இருந்தாலும் சரி ஒன்னு நீயும் போய் கொடு... துணைக்கு அவனை கூட்டிட்டு போனாலும் சரி இல்ல வேற யாரையாவது கூட்டிட்டு போனாலும் சரி... எல்லாத்துக்கு பணத்தை கொடுத்து முடிச்சுடு... இது தான் கடைசி... இனிமே அவன் கண் வாங்குவான் னு என் காதுக்கு விசயம் வந்தா நா மனுசனா இருக்க மாட்டேன்... சொல்லிட்டேன்..."என்று அவள் கையில் பணத்தை‌ கொடுக்க...

லியா : இல்ல மாமா... நீங்களே பாத்து கொடுங்க‌ மாமா...

முத்துராமன் : இல்ல மா... நீயே கொடு மா...

லியா உத்தமா வ ஐ பார்த்து பணத்தை வாங்கினாள்...

லியா பணத்தை வாங்கி கொண்டு பாரதி அருகில் சென்று "பிடிங்க கா... இது ரேஷ்மியோட பணம்... என் புருஷன் அனாவசியமா வாங்கி வெட்டி செலவு பண்ண பணத்தை ரேம்ஷிக்காக வச்சு இருக்க பணத்தை கொடுத்து அடைக்க வேணாம் கா... நா பாத்துக்குறேன்... இதை நீங்களே வச்சுக்கோங்க..."என்று அவள் கையை பிடித்து கொடுக்க...

பாரதி கையை உறுவி கொண்டு "அடி வாங்குவ லியா... சொல்றத செய்... முத கடன் பிரச்சினை ய‌ முடி..."என்று கடுமையாக சொல்ல...

லியா : அது நா பாத்துக்குறேன் கா... சொன்னா நீங்க கேளுங்க... ரேஷ்மிக்கு னு வச்சது வேணாம் கா...

பாரதி : இத என் கிட்ட கொடுத்துட்டா எப்படி டி கடனை அடைப்ப...

லியா தன் கழுத்தில் இருந்த தாலி செயினை எடுத்து காட்டி "இத என் அம்மா எனக்கு போட்டு விட்டது... உங்களுக்கு வளைகாப்பு போடும் போது எனக்கு இத கொடுத்தாங்க... இது மூனு பவுனு... இது நா அடகு வச்சு கடனை கட்டிக்கிறேன்..."என்று சொல்ல...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang