ஜோனாவின் கேள்விக்கு லியா பெருமூச்சு விட்டு அவளை பார்த்தாள்...
ஜோனா : ஏன் டி இப்ப நா என்ன கேட்டுட்டேன் னு நீ இப்படி பாக்குற...
லியா : ஜெரோம் அண்ணா அந்த பொண்ணு யாரு னு சொன்னதும் தான் நா அதிர்ச்சி ஆகிட்டேன்...
ஜோனா : யாரு...
லியா : அவ சுந்தர் தங்கச்சி...
ஜோனா புருவம் சுருக்கி கொண்டு "சுந்தர்..."என்று கேட்க...
லியா : ஆமா...
ஜோனா : யார் அது...
லியா : அவன் என் husband friend... வீட்டுக்கு எல்லாம் வருவான்... ஆனா ஒரு நாள் தீடீர் னு வர்றதே நிறுத்திட்டான்... அவன் எப்போ வர்றது இல்லையோ... அப்போ இருந்தே உத்தமா கிட்டையும் ஒரு வித்தியாசம் தெரிஞ்சுது... ஒரு நாள் என்ன ஆச்சு னு தெரியுமா.. நா தான் சொல்லி இருக்கேன்... உத்தமா எதுக்கு எடுத்தாலும் சண்டை போடுவான்... அப்படி ஒரு நாள் சண்டை நடக்கும் போது சுந்தர் கூட சேர்த்து வச்சு பேசிட்டான்.... எனக்கு எதுவுமே புரியல... எனக்கு ஒன்னுமே புரியல... ஆனா இப்ப வரைக்கும் என்ன காரணம் னு எனக்கு தெரியல...
ஜோனா கன்னத்தில் கை வைத்து கொண்டு அவளையே பார்த்தாள்...
லியா : What...
ஜோனா : "I think..."என்று இழுக்க....
லியா : You think...
ஜோனா : Something is wrong...
லியா : I ask what it is...
ஜோனா : I don't know... but maybe it's about you
லியா : how do you say...
ஜோனா : "Because உத்தமா தேவை இல்லாம உன்னையும் somebody what's his name..."என்று தன் தாடையை தேய்க்க....
லியா : சுந்தர்...
ஜோனா : ஹான்... சுந்தர்...அந்த சுந்தரையும் உன்னையும் சேர்த்து வைச்சு பேச வேண்டிய அவசியம் இல்லை...
லியா : point... நா இப்படி யோசிக்கவே இல்லையே...
ஜோனா : உனக்கு தான் மூளையே இல்லை...
லியா முறைக்க..
ஜோனா : இப்ப எதுக்கு என்னைய முறைக்கிற... உண்மையே தானே சொன்னேன்...
ВЫ ЧИТАЕТЕ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Художественная прозаஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
