லியா தலையில் கை வைத்து அமர்ந்திருக்க...சாம்லி பாரதி காதில் மெதுவாக " இவளுக்கு என்ன ஆச்சு... ஏன் இப்படி உட்காந்து இருக்கா..."என்று கேட்க...
பாரதி : தெரியல... I think உத்தமா ஊருல இல்லை ல... அது தான்... தலைவனை பிரிந்த கவலையில் தலைவி இருக்கிறாள்...
சாம்லி : அப்படி தெரியலையே...
பாரதி : ப்ச் அப்படி தான் இருக்கும்... உத்தமா வர மூனு நாள் ஆகும்...
சாம்லி : இல்ல நானே அவ கிட்ட கேட்குறேன்...
பாரதி : கேளு அவ அத தான் சொல்லுவா...
சாம்லி : லியா
லியா அசையாமல் இருந்தாள்...
பாரதி : நா தான் சொன்னேன் ல... உத்தமா இல்லாத கவலை...
சாம்லி : "சும்மா இரு..."என்று லியா தோளை பிடித்து உலுக்க...
லியா மெதுவாக அவளை பார்த்தாள்...
சாம்லி : What happen...
லியா : இந்த உத்தமா ஏன் இப்படி பண்றான்...
பாரதி சாம்லி யை பார்த்து "நா தான் சொன்னேன் ல..."என்பது போல் கண் காட்ட...
சாய்லி :"இரு..."என்பது போல் கை காட்டி விட்டு "நீ என்ன சொல்ற... உத்தமா என்ன பண்ணான்..."என்று கேட்க...
லியா : இப்ப மணி என்ன...
சாம்லி : 11.15... ஏன்...
லியா பெருமூச்சு விட்டு "உத்தமா காலைல அஞ்சு மணிக்கு இங்க இருந்து கிளம்பி போனான்... அவன் போனதுல இருந்து பத்து call பண்ணிட்டான்..."என்று சோகமாக சொல்ல...
சாம்லி அவளையே பார்த்து கொண்டே யோசனையுடன் இருக்க...
பாரதி : என்ன டி சொல்ற... உத்தமா வா... தனியா விட்டுட்டு வந்துட்டோமே னு call பண்ணி இருப்பான்...
லியா : இல்ல கா... அவன் கேட்டது எல்லாம் என்ன பண்ற... என்ன செய்ற... என்ன இருக்க...
பாரதி : என்ன பண்ற என்ன செய்ற இது கேட்டான் ok... ஆனா எங்க இருக்க... இந்த வார்த்தையே தப்பா இருக்கே...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???