லியா திரும்பி பார்த்து கொண்டே வர...
உத்தமா முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் bike ஐ ஓடினான்...
லியா நல்லா தோளை இறுக்கி பிடிக்க...
நல்லா mirror வழியே லியா வை பார்த்து "என்ன ஆச்சு மா..."என்று கேட்க...
லியா : உங்க தம்பி முறைக்கிறாரு மாமா...
நல்லா : நீ அவனை எதுக்கு மா பாக்குற... அவனை கண்டுக்காத...
லியா : வீட்டுக்கு போனது எனக்கு பேச்சு கிடைக்க போகுது...
நல்லா : அட ஏன் மா நீ வேற... நாங்க இருக்கோம் ல... அப்புறம் என்ன மா... அப்படி என்னத்த பண்றான் னு நானும் பாக்குறேன்...
லியா : பாருங்க பாருங்க... சாம் ஹ கூட்டிட்டு வந்து இருக்கலாம்...
நல்லா : எட்வின் வந்து கூட்டிட்டு வரேன் னு சொல்லிட்டான்...
லியா : ஓ...
Hospital வர...
நல்லா : அம்மாடி மெதுவா இறங்கு மா...
உத்தமா வண்டியை நிறுத்தி ஓடி வந்து அவள் கையை பிடித்து "மெதுவா இறங்கு டி..."என்று கடுகடுக்க...
லியா அவனை பார்த்து கொண்டே இறங்க...
நல்லா வண்டியை நிறுத்தி விட்டு "டேய் எதுக்கு டா இப்ப அந்த பொண்ணு கிட்ட கடுப்படிக்கிற..."என்று கத்த...
உத்தமா : நா நல்லா தான் பேசுறேன்...
நல்லா : யாரு நீயா... நீ பேசுற லட்சணம் தான் தெரியுதே...
உத்தமா : "ப்ச் நீ பேசாம போ அண்ணா..."என்று அவள் கையை பிடித்து அழைத்து செல்ல...
நல்லா : மெதுவா பாத்து கூட்டிட்டு போ டா... எங்க னு தெரியாம போற...
உத்தமா : நீ முன்னாடி போ... அங்க நின்னு என்ன பண்ற...
நல்லா : "எல்லாம் நேரம் டா..."என்று அவர்களை கடந்து முன்னால் செல்ல... இருவரும் பின் தொடர்ந்தனர்...
உத்தமா மெதுவாக அவள் காதில் மட்டும் கேட்குமாறு "என்ன டி அவசரம் உனக்கு... வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாமே... இப்பவே பாக்கனும் னு ஏன் அடம் பிடிக்கிற.... சொல்றத எதையுமே கேட்க கூடாது னு இருக்கீயா...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???