முத்துராமன் கீழே இறங்கி வர...
லியா அழுவதை பார்த்து அவருக்கு சங்கடமாக இருந்தது...
முத்துராமன் தயங்கி கொண்டே "அம்மாடி அழாத மா... அந்த பயல திட்டிட்டேன்... விடியட்டும் அவனை பேசிக்கிறேன்... இப்ப போதை ல இருக்கான்... என்ன சொன்னாலும் அவனுக்கு ஏறாது... "என்று சொல்ல...
லியா முத்துராமனை பார்க்க...
முத்துராமன் : பாரதி இன்னக்கி ராத்திரிக்கு இந்த பொண்ணை உன் கூட படுக்க வச்சுக்கோ... அறிவு வந்தா உத்தமா கூட படுத்துக்க சொல்லு...
பாரதி : சரி மாமா...
முத்துராமன் : அம்மாடி நீ போய் தூங்கு மா... அவனுக்கு காலைல இருக்கு... நீ எதுவும் நினைக்காம போய் தூங்கு மா...
லியா அழுகையை நிறுத்த...
முத்துராமன் : பாரதி உள்ள கூட்டிட்டு போ மா...
பாரதி தலையை ஆட்டி விட்டு அவளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல...
முத்துராமன் தலையில் கை வைத்து அமர...
சாம்லி அவர் அருகில் வந்து "என்ன பா..."என்று அவர் தோளை தொட...
முத்துராமன் : இந்த பய எதுக்கு இப்படி பண்றான்... அவனால அந்த பொண்ணு கஷ்டப்படுது...
சாம்லி : நீங்க எதுவுமா நினைக்காதீங்க... நா போய் அவனை பாக்குறேன்...
முத்துராமன் : அவன் இன்னும் நிதானத்துக்கு வரல மா...
சாம்லி : "நா பாத்துக்கிறேன்... விடுங்க பா..."என்று மாடிக்கு சென்றாள்...
மாடியில்...
சாம்லி கதவை அருகே வர...
அறிவு பல்லை கடித்து கொண்டு வேகமாக உத்தமா தலையில் ஓங்கி அடித்தான்...
நல்லா அவனை பிடித்து இழுத்து "டேய் அறிவு என்ன டா..."என்று கத்த...
எட்வின் : நல்லசெல்வா விடுங்க... அறிவு அடிக்கிறது ல தப்பு இல்ல...
நல்லா : என்ன எட்வின் நீயும்...
எட்வின் : முத அவனை பாரு... எப்படி இருக்கான் னு...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???