"இது எல்லாம் தேவை இல்லாத பேச்சு..."
நல்லாவும் பாரதியும் குரல் கேட்டு திசையில் பார்க்க...
நல்லசெல்வன் மனைவி வசந்தா மூன்று வயது மகன் தினகரன் நின்றனர்...
நல்லா : வசந்தா நீ வீட்டுக்கு போ...
வசந்தா : என்னமோ பண்ணுங்க... நா சொன்னா இந்த வீட்டுல யாரு கேட்குறாங்க... இந்த பாரதி சொல்றத தானே பேசுறாங்க...
பாரதி : என்ன கா பேசுறீங்க... இப்படி எல்லாம் பேசாதீங்க கா... நீங்க தானே கா மூத்த மருமக...
வசந்தா : அப்படியா... அது பேருக்கு மட்டும் தான்... நிஜத்துல இல்ல...
பாரதி : அக்கா நீங்கள் வாங்க முத வீட்டுக்கு போலாம்...
நல்லா : வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வசந்தா...
வசந்தா : அது தானே... என்னக்கி என்னைய பேச விட்டு இருக்கீங்க... இப்ப கூட அவ சொல்றத தானே கேட்குறீங்க...இந்த வீட்டுல என்னைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கு...
நல்லா : "வசந்தா சொன்னா கேட்க மாட்ட..."என்று அதட்ட...
வசந்தா தினகரனை இழுத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்...
நல்லா பாரதியை பார்த்து "அந்த பொண்ணை கூட்டிட்டு வீட்டுக்கு வா..."என்று செல்ல...
பாரதி : லியா வா...
சாம்லி : "breaking news waiting... Detailed news read பண்ண பாரதி ready நீ ready யா..."
லியா பாவமாக முழிக்க...
பாரதி சாம்லி தலையில் தட்டி "உன் வாலு தனத்தை அடக்கி வை..."என்று லியா பார்த்து "வா போகலாம்... வசந்தா அக்கா என்னைய மாதிரி இல்ல... அவங்க பத்தி சொல்றேன் கேட்டுக்கோ..."
சாம்லி ஏதோ சொல்ல வர...பாரதி அவளை பார்க்க... வாயை மூடி கொண்டாள்...
பாரதி : நல்லா கேட்டுக்கோ... வசந்தா அக்காவுக்கு நா தான் இந்த வீட்டு மூத்த மருமக னு ஒரு கெத்து இருக்கனும் னு தன்னை எல்லாரும் பாக்கும் போது மரியாதை கிடைக்கனும் னு நினைப்பாங்க...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???