நட்ட நடு ராத்திரி...
எட்வின் அணைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த சாம்லி சலித்தவாறு சினுக்கி கொண்டு இருந்த தன் mobile ஐ எடுத்து பார்த்து பதறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்...
சாம்லி :"என்ன தான் வேணும் இவனுக்கு..."என்று யோசித்தவாறு காதில் கொடுத்து " என்ன டா... இந்த நேரத்துல உனக்கு எனன் வேணும்..."என்று கேட்க...
எதிரே உத்தமா தயங்கியவாறு "இல்ல கா... லியாவுக்கு call பண்ணேன்... அவ எடுக்கல... அசந்து தூங்கிட்டாளா...
சாம்லி : யோவ் உத்தமா இது உனக்கே நல்லா இருக்கா... சும்மா ஏன் டா இப்படி call பண்ணி இம்சை பண்ற... அந்த புள்ளைய பாத்தா பாவமா இல்லையா... காலைல இருந்து எத்தனை தடவ தான் call பண்ணுவ... நடு ராத்திரி ல என்ன டா பிரச்சனை உனக்கு...
உத்தமா : அது வந்து நா கூட இல்ல ல... தூங்காம இருப்பாளோ னு போட்டேன்...
சாம்லி : அடிச்சு போட்ட மாதிரி தூங்குற போதுமா... திரும்ப எனக்கோ இல்ல அவளுக்கோ call வந்துச்சு ... உன் number ஹ block போட்டு விட்டுடு வேன் பாத்துக்கோ...
உத்தமா : கோவப்படாத கா... நீ தூங்கு கா...
சாம்லி : "தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி விட்டு பேசுற பேச்சை பாரு... வை டா..."என்று கத்தி விட்டு வைக்க...
எட்வின் கண் மூடியவாறு தூக்க கலக்கத்தில் "யாரு மா இந்த நேரத்துல..."என்று கேட்க...
சாம்லி : இந்த உத்தமா பய... பாடா படுத்துறான்... முடியல... பேசாம கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்...
எட்வின் : "சரி புலம்பாம தூங்கு டி..."என்று அவளை இழுத்து அணைத்து கொள்ள...
தூக்கத்தை தொடர்ந்தனர்...
******
அடுத்த நாள்...
காலை...
சாம்லி எழுந்தவள் தன் கணவன் முகத்தை பார்த்து வெட்கத்துடன் எழுந்து சென்றாள்...
சாம்லி kitchen ல் சமைத்து கொண்டு இருக்க... தூங்கி எழுந்து வந்த எட்வின் சாம்லியை பின்னால் இருந்து அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான்...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???